Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூவத்தூர் செல்லும் ஓ.பி.எஸ்- சசிகலா தரப்போடு மோதல் எற்படும் சூழ்நிலை...

Webdunia
செவ்வாய், 14 பிப்ரவரி 2017 (13:57 IST)
அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்கியுள்ள கூவத்தூர் விடுதிக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் செல்ல இருக்கிற நிலையில், அவருக்கும் அங்கு ஏற்கனவே இருக்கும் சசிகலா ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்படும் பரபரப்பான சூழ்நிலை உருவாகியுள்ளது..


 

 
எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது. சசிகலா, தினகரன், இளவரசி ஆகியோர் குற்றவாளிகள் என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். மேலும், அவர்களுக்கு ரூ.10 கோடி அபராதம் விதித்து தீர்ப்பளித்தனர். இன்று மாலைக்குள் அவர்கள் கர்நடக உயர் நீதிமன்றத்தில் சரண்டர் ஆக வேண்டும் என கூறப்பட்டுள்ளது...  
 
இந்நிலையில், கடந்த 8ம் தேதி முதல், அதிமுக எம்.எல்.ஏக்கள், கிழக்கு கடற்கரை சாலை, கூவத்தூரில் உள்ள ‘கோல்டன் பே ஹவுஸ்’ எனும் விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். தனக்கு சாதகமாக தீர்ப்பு வந்தபின், ஆளுநரிடம் அவர்களை அழைத்து செல்லும் முடிவில் இருந்தார் சசிகலா. ஆனால், தீர்ப்பு அவருக்கு எதிராக அமைந்து விட்டதால், எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என ஆளுநரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.. 


 

 
இந்நிலையில், அதிமுக எம்.எல்.ஏக்களை சந்திப்பதற்காக, தனது ஆதரவாளர்களோடு முதல்வர் ஓ.பி.எஸ் கூவத்தூருக்கு செல்வதாக செய்தி வெளியாகியுள்ளது. இதற்கு, மாநிலங்களவை உறுப்பினர் நவநீதகிருஷ்ணன் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர். சட்ட ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்த ஓ.பி.எஸ் முயல்கிறார் எனவும், அவர் அங்கு வரக்கூடாது என அவர்கள் குரல் எழுப்பினர்.  
 
ஆனால், தக்க போலீஸ் பாதுகாப்போடு, ஒரு முதல்வராக ஓ.பி.எஸ் அங்கு செல்ல இருப்பதாக தெரிகிறது.  ஒருவேளை அப்படி அவர் அங்கு சென்றால், அவருக்கு சசிகலா ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவாகிள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது..
 
ஏற்கனவே அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது...
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ.1000 இல்லாதது ஏன்? அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்..!

பாலியல் வன்கொடுமைகள் விவகாரம்: தமிழக பெண்களுக்கு விஜய் எழுதிய கடிதம்..!

வெளிநபர்களை அனுமதிக்க கூடாது: கல்வி நிறுவனங்களுக்கு உள்துறை செயலாளர் உத்தரவு..!

ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு. தமிழக அரசு அறிவிப்பு..!

12 மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரத்தில் மிதமான மழை.. வானிலை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments