Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆவின் பொருட்கள் விலை உயர்வு: ஓபிஎஸ் கண்டனம்!

Webdunia
வெள்ளி, 4 மார்ச் 2022 (15:23 IST)
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆவின் பொருட்கள் விலை உயர்வை கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

 
தமிழக முதல்வராக முக ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்றவுடன் கையெழுத்திட்ட முக்கிய கோப்புகளில் ஒன்று பால் விலை குறைப்பு என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் தற்போது திடீரென ஆவின் பொருட்கள் அதிகரித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பால் உள்பட ஆவின் பொருட்களின் புதிய விலை பட்டியல் இதோ:
 
27 ரூபாயாக இருந்த அரைக்கிலோ தயிர், தற்போது 30 ரூபாய்
14 ரூபாயாக இருந்த 200 கிராம் தயிர் 15 ரூபாய்
515 ரூபாயாக இருந்த ஒரு லிட்டர் நெய் (ஜார்)  535 ரூபாய்
265 ரூபாயாக இருந்த அரை லிட்டர் நெய் (ஜார்)  275 ரூபாய்
115 ரூபாயாக இருந்த 200 கிராம் நெய் (ஜார்) 120 ரூபாய்
2550 ரூபாயாக இருந்த 5 லிட்டர் நெய் (ஜார்)  தற்போது 2650 ரூபாய்
8350 ரூபாயாக இருந்த நெய் (டின்) 8650 ரூபாய்
80 ரூபாயாக இருந்த 200 கிராம் பாதாம் பவுடர் 100 ரூபாய் 
 
இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இந்த விலை உயர்வை கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஆவின் பால் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்து விட்டு, இன்று ஆவின் பொருட்களின் விலையை திமுக அரசு உயர்த்தியுள்ளதை பார்க்கும் போது, ஒரு பக்கம் மக்களுக்கு கொடுப்பது போல் கொடுத்து விட்டு, மறுபக்கம் அவற்றைப் பிடுங்கும் முயற்சியில் ஈடுபடுவது தெளிவாக தெரிகிறது. 
 
இது ஏழை, எளிய மக்களை ஏமாற்றும் செயல். திமுக அரசின் இந்த மக்கள் விரோத செயலுக்கு எனது கண்டனத்தை கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். கோடைகாலம் ஆரம்பிக்க இருக்கின்ற சூழ்நிலையில் பால் பொருட்கள் மற்றும் ஐஸ்கிரீம் போன்றவற்றை பொது மக்கள் குறிப்பாக, ஏழை எளிய மக்கள் இன்னும் அதிகமாக கூடிய நிலையில் இந்த விலை உயர்வு மக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
 
எனவே தமிழக முதல்வர் இதில் உடனடியாக தலையிட்டு இன்று முதல் அறிவிக்கப்பட்டுள்ள, ஆவின் பொருட்களுக்கான விலை உயர்வை, ரத்து செய்ய வேண்டும் என்று அதிமுக சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

நீட் தேர்வு நாடகத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள்! சென்னை மாணவி தற்கொலை குறித்து ஈபிஎஸ்..!

திடீரென டெல்லி சென்ற செங்கோட்டையன்.. பதில் கூற மறுத்த எடப்பாடி பழனிசாமி..!

அடுத்த கட்டுரையில்
Show comments