ஸ்டாலின் என்ன மகாத்மா காந்தியா? ஒபிஎஸ் கேள்வி!

Webdunia
புதன், 3 பிப்ரவரி 2021 (10:53 IST)
கிராமசபை கூட்டங்கள் நடத்த ஸ்டாலின் என்ன மகாத்மா காந்தியா என துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகமெங்கும் தேர்தல் நெருங்குவதால் திமுக, மற்றும் மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் கிராம சபைக் கூட்டங்களை அதிகளவில் நடத்தி வருகின்றன. இந்நிலையில் தமிழக அரசு கொரோனாவைக் காரணம் காட்டி அந்த கூட்டங்கள் நடக்க அனுமதி மறுத்துள்ளது. இது எதிர்க்கட்சிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் கண்டனங்களை தெரிவித்து வந்த நிலையில் சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஓ பன்னீர்செல்வம் அதற்குப் பதிலளித்துள்ளார். அதில் ‘கிராமசபைக் கூட்டங்களை மாவட்ட ஆட்சியர்தான் நடத்த வேண்டும். அந்த கூட்டங்களை நடத்த ஸ்டாலின் என்ன மகாத்மா காந்தியா?’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

22 மாவட்டங்களில் இன்று கனமழை.. நெருங்கி வருகிறதா காற்றழுத்த தாழ்வு மையம்?

பொளந்து கட்டிய கனமழை.. இன்று எந்தெந்த பகுதிகளில் பள்ளிகள் விடுமுறை?

ஈபிஎஸ்ஸின் 'எழுச்சிப் பயணம்' மீண்டும் தொடக்கம்: தேதி, இடத்தை அறிவித்த அதிமுக..!

ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு: திடீரென ஏற்பட்ட விபரீத நிகழ்வு என்ன?

குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்க மாட்டேன்.. எம்ஜிஆர் பஞ்ச் டயலாக்கை பேசிய விஜய்..!

அடுத்த கட்டுரையில்
Show comments