Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதாவால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட ஓபிஎஸ்: நடராஜனுக்கு பதிலடி!

ஜெயலலிதாவால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட ஓபிஎஸ்: நடராஜனுக்கு பதிலடி!

Webdunia
செவ்வாய், 4 ஜூலை 2017 (10:33 IST)
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த சட்டசபை தேர்தலின் போது முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை வீட்டு காவலில் வைத்ததாக அப்போதே கூறப்பட்டது. அதன் பின்னர் சசிகலாவுக்கு எதிராக ஓபிஎஸ் கலகம் செய்த பின்னரும் இந்த விவகாரம் குறித்து பேசப்பட்டது.


 
 
சமீபத்தில் சசிகலாவின் கணவர் நடராஜன் கூறும்போது, ஜெயலலிதா ஓ.பன்னீர்செல்வத்தை வீட்டுக்காவலில் வைத்திருந்தார் என கூறினார். இதற்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதில் அளித்துள்ளார்.
 
முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன் இல்லத் திருமணத்தில் கலந்துகொள்ள நேற்று திருச்சி வந்த ஓபிஎஸிடம் செய்தியாளர்கள், உங்களை ஜெயலலிதா 5 நாட்கள் வீட்டுக்காவலில் வைத்திருந்ததாக சசிகலாவின் கணவர் நடராஜன் கூறியுள்ளாரே என கேள்வி எழுப்பினர்.
 
அதற்கு பதில் அளித்த ஓபிஎஸ் தன்னை ஜெயலலிதா வீட்டுக்காவலில் வைத்திருந்ததாக நடராஜன் கூறியது சுத்த வடிகட்டிய பொய் என காட்டமாக கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பூமி பூஜை போட்ட ரோட்டுக்கு மீண்டும் பூமிபூஜை: செல்லூர் ராஜூ கிண்டல்..!

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் போல் ஒரு ஆலயம்.. தெலுங்கானா பக்தர்கள் ஆச்சரியம்..!

ரஜினி பாணியில் இமயமலை சென்ற அண்ணாமலை.. டெல்லி செல்லவு திட்டமா?

இன்றுடன் நிறைவடையும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள்.. ரிசல்ட் எப்போது?

பாஜகவுடன் கூட்டணியால் அதிருப்தி.. அதிமுக பிரமுகர் கட்சியில் இருந்து விலகல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments