ஓபிஎஸ்-ஐ ஒதுக்குகிறதா பாஜக? பிறந்த நாளுக்கு கூட வாழ்த்து சொல்லவில்லையே..!

Siva
புதன், 17 ஜனவரி 2024 (14:05 IST)
பாஜக கூட்டணியில் கண்டிப்பாக ஓபிஎஸ் அணி இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில் அவரை பாஜக ஒதுக்கி வருவதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 கடந்த 14ஆம் தேதி ஓபிஎஸ் தனது 73 வது பிறந்த நாளை கொண்டாடிய போது பிரதமர் தரப்பில் இருந்தும் அல்லது பாஜகவின் முக்கிய தலைவர்களிடம் இருந்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து வரவில்லை.  

மேலும் சமீபத்தில் டெல்லியில் நடந்த பொங்கல் விழாவில் கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் ஓபிஎஸ் க்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இதனால் ஓபிஎஸ் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

இதனை அறிந்து தான் அண்ணாமலை தனது சமூக வலைத்தளத்தில் ஓபிஎஸ் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.  ஓபிஎஸ் தனி அணியாக பாஜக கூட்டணியில் இருக்க வேண்டும் என்று விரும்புவதாகவும் ஆனால் பாஜகவோ ஓபிஎஸ், பாஜகவில் இணைய வேண்டும் என்று வலியுறுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

அதனால்தான் ஓபிஎஸ் அவர்களுக்கு பாஜகவின் முக்கிய தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து கூறவில்லை என்றும் வரும் தேர்தலில் ஓபிஎஸ், பாஜக அணியில் இடம் பெறுவது சந்தேகம் என்றும் கூறப்படுகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுக கூட்டணி அமித்ஷாவால் திணிக்கப்பட்ட ஒரு பிளாக்மெயில் கூட்டணி: முதல்வர் ஸ்டாலின்..!

234 தொகுதிகளிலும் விஜய் டெபாசிட் கூட வாங்க மாட்டார்.. தராசு ஷ்யாம் கணிப்பு..!

குடியரசு தின விழாவிற்காக வேலை வாங்கிய பள்ளி நிர்வாகம்.. 8ஆம் வகுப்பு மாணவி பரிதாப பலி..!

வடநாட்டு அரசியலில் திருப்பம் என ரஜினி சொன்னது.. வைரமுத்துவின் பொய்க்கவிதை: நயினார் நாகேந்திரன்..

கூட்டணிக்கு வரலைல்ல.. விஜய்யை வச்சு செய்யும் டிடிவி, நயினார் நாகேந்திரன், செல்லூர் ராஜு..!

அடுத்த கட்டுரையில்
Show comments