Webdunia - Bharat's app for daily news and videos

Install App

75% மட்டுமே தனியார் கல்லூரிகளில் கட்டணம் !

Webdunia
வெள்ளி, 25 ஜூன் 2021 (23:02 IST)
அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தொற்றுப் பரவலைக் குறைக்க மத்திய அரசு அந்தந்த மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஒரு ஆண்டு காலமாகவே கல்லூரிகள் நடைபெறாத சூழல் உள்ளது. இடையே சில வாரங்கள் கல்லூரிகள் திறக்கப்பட்டபோதும் இரண்டாம் அலை பரவலால் மீண்டும் மூடப்பட்டது. இந்நிலையில் மாணவர்களுக்கு வகுப்புகள் மற்றும் தேர்வுகள் ஆன்லைன் மூலமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தனியார் கல்லூரிகள் முழு கட்டணம் மாணவர்களிடம் வசூலிக்க கூடாது என்றும், 75 % கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதை சுட்டிக்காட்டியுள்ள உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தனியார் கல்லூரிகள் 75% கல்வி கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்றும், முழு கட்டணம் வசூலிக்கும் கல்லூரிகள் குறித்து மாணவர்கள் புகார் அளிக்கலாம் எனத் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா காலத்தில் மாணவர்கள் விண்ணபிக்க வசதியாக இணைய வழி தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திரைப்படங்களில் போலிஸ் வன்முறையை கொண்டாடுபவர்கள் இப்போது ஏன் கவலை கொள்கிறார்கள்?": விஜய்க்கு கனிமொழி மறைமுக கேள்வி..!

இதைத்தான் எதிர்பார்த்தோம்.. விஜய் செய்வது நாகரீக அரசியல்: பத்திரிகையாளர் மணி

போரை நிறுத்தாவிட்டால் 100% வரி.. ரஷ்யாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை.. புடின் பதில் என்ன?

திருப்பதி அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லை!

சிக்கன் பீஸ் சின்னதா இருக்குது.. கொலையில் முடிந்த திருமண விழா.. மணமக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments