கலை, அறிவியல் கல்லூரிகளில் ஆன்லைன் வழியாக மாணவர்கள் சேர்க்கை: அரசு முடிவு

Webdunia
திங்கள், 13 ஜூலை 2020 (11:04 IST)
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இன்னும் திறக்கப்படவில்லை என்பதும், எப்போது திறக்கும் என்பது குறித்த தகவல் இன்னும் அரசிடமிருந்து வெளிவராததால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் குழப்பத்தில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
மேலும் இந்த ஆண்டு கல்லூரிகளில் முதலாமாண்டு சேரும் மாணவர்களின் நிலை பரிதாபகரமாக உள்ளது. இன்னும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகளே வரவில்லை என்பதும் தேர்வு முடிவுகள் வந்தாலும் எப்பொழுது முதலாமாண்டு மாணவர்களுக்கான அட்மிஷன் தொடக்கம் என்பது தெரியாததால் மாணவர்களின் எதிர்கால வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது
 
இந்த நிலையில் தமிழக அரசின் உயர்கல்வித்துறை தற்போது அதிரடி முடிவு ஒன்றை எடுத்து உள்ளது. இதன்படி அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு ஆன்லைன் வழியாக மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என்றும் கொரனோ வைரஸ் தாக்கம் காரணமாக இந்த முடிவை உயர்கல்வித்துறை எடுத்துள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இதனை அடுத்து பிளஸ் டூ தேர்வு முடிவு அறிவிக்கப்பட்டதும் மாணவர்கள் கலை அறிவியல் கல்லூரிகளில் ஆன்லைன் மூலம் விண்ணப்பத்து,  ஆன்-லைன் மூலமே கல்லூரிகளில் சேர்ந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கி கணக்கு தொடங்க பணம் கொடுக்கிறார்களா? மாணவ, மாணவிகளை குறிவைத்து மோசடி..!

அல்-பலாஹ் பல்கலை பேராசிரியர்கள் ஊழியர்கள் திடீர் மாயம்! பயங்கரவாதிகளுட்ன் தொடர்பா?

6 மாதங்களாக ரிப்பேர் பார்த்து கொண்டிருக்கும் பாகிஸ்தான் இராணும். 'ஆபரேஷன் சிந்துார்' தாக்குதலின் வலிமை அப்படி..!

கால்பந்து விளையாடும்போது மோதல்.. சமாதானம் பேச சென்ற 19 வயது இளைஞர் கொலை..!

பிரதமருக்கு கொலை மிரட்டல் விடுத்தாரா திமுக பிரமுகர்: நயினார் நாகேந்திரன் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments