தமிழ்நாட்டின் வங்கக்கடல் பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஓஎன்ஜிசி இந்தியா முழுவதும் பல பகுதிகளில் ஆழ்துளை கிணறுகள் மூலமாக எண்ணெய், எரிவாயு போன்றவற்றை எடுத்து வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்னதாக இந்தியாவை சுற்றியுள்ள கடல்பகுதிகளில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பதற்கான திட்டங்களை ஓஎன்ஜிசி மேற்கொண்டு வந்தது.
இந்நிலையில் இந்திய கடல்பகுதிகளில் 25 பகுதிகளில் ஆழ்கடலில் எண்ணெய், எரிவாயு எடுக்க ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் 3 பகுதிகள் கன்னியாக்குமரி கடல் பகுதியில் இந்திய பெருங்கடலை ஒட்டியும், ஒரு பகுதி சென்னை அருகே கடல்பகுதியிலும் அமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனால் கடல் மாசுபாடு ஏற்படலாம் என்றும், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்புக்கு உள்ளாகலாம் என்றும் மீனவர்களிடையே அச்சம் உள்ளது. இந்த திட்டத்திற்கு மீனவர்களிடையே கடும் எதிர்ப்புகள் நிலவி வரும் நிலையில் இந்த திட்டத்திற்கு அனுமதி அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K