Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேரறிவாளனுக்கு மேலும் ஒரு வாரம் பரோல் – உச்சநீதிமன்றம் அறிவிப்பு!

Webdunia
திங்கள், 23 நவம்பர் 2020 (15:53 IST)
ராஜீவ் கொலை வழக்கில் சிக்கி 28 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளனுக்கு மேலும் ஒரு வாரம் பரோல் வழங்கியுள்ளது சிறை நிர்வாகம்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 28 ஆண்டுகளுக்கும் மேலாக ஏழு தமிழர்கள் சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. ஏழு தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அமைச்சரவை தீர்மானம் இயற்றியும் இன்னும் அவர்கள் விடுதலையாகவில்லை.

இந்த நிலையில் சிறையில் இருக்கு எழுவரில் ஒரு சிலர் அவ்வப்போது பரோலில் வெளிவந்து மீண்டும் சிறைக்கு சென்றுள்ளனர். இந்த நிலையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு 45 நாள் பரோல் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. இந்நிலையில் சிறுநீர் தொற்றுக்காக சிகிச்சைப் பெற்று வரும் பேரறுவாளனை நிரந்தரமாக விடுதலை செய்யவேண்டும் என அவரின் தாயார் அற்புதம் அம்மாள் கோரிக்கை வைத்துள்ளார். மேலும் தமிழக எதிர்க்கட்சிகளும் இது சம்மந்தமாக கோரிக்கைகளை தொடர்ந்து வைத்து வருகின்றன.

இந்நிலையில் இன்றோடு பேரறிவாளனின் பரோல் முடியவுள்ள நிலையில் அவரின் சிகிச்சைக்காக மேலும் ஒரு வாரம் பரோலை நீட்டித்துள்ளது உச்சநீதிமன்றம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments