சிறையில் உள்ள ஆட்டோ சங்கரின் சகோதரருக்கு ஒருமாத விடுப்பு: உயர் நீதிமன்றம் உத்தரவு

Siva
செவ்வாய், 6 பிப்ரவரி 2024 (15:28 IST)
கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் உள்ள ஆட்டோ சங்கரின் சகோதரர் மோகனுக்கு ஒருமாத விடுப்பு வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
தொடர் கொலைகள் வழக்கில் ஆட்டோ சங்கர் கைது செய்யப்பட்டபோது, அவரது சகோதரர் மோகனும் கைது செய்யப்பட்டார். 1996ம் ஆண்டு விசாரணை நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது
 
இந்த நிலையில் 35 ஆண்டுகளாக சிறையில் உள்ள மோகனை முன் கூட்டியே விடுதலை செய்யக்கோரியும், இடைக்காலமாக அவருக்கு 3 மாத விடுப்பு வழங்க வேண்டும் எனவும் அவரது மனைவி உயர் நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தார்
 
இந்த நிலையில் ஒரு மாதம் விடுப்பு வழங்க அரசுத்தரப்பு சம்மதம் தெரிவித்ததை அடுத்து, உயர் நீதிமன்றம் ஒரு மாதம் விடுப்பு வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் வாரம் ஒருமுறை காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திடவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் செங்கோட்டையனுக்கு என்ன பதவி.. விஜய் சந்திப்பில் தீவிர ஆலோசனை..!

ஒரு கிலோ வெங்காயம் ஒரு ரூபாய்.. வெங்காயத்திற்கு இறுதி சடங்கு செய்த விவசாயிகள்..!

விஜய் வீட்டுக்கு சென்றார் செங்கோட்டையன்.. நாளை தவெகவில் அதிகாரபூர்வ இணைப்பு..!

இம்ரான்கான் சிறையில் கொலை செய்யப்பட்டாரா? சமூகவலைத்தளங்களில் பரவும் அதிர்ச்சி தகவல்..!

உரிமையை கொடுங்கள், பிச்சை வேண்டாம்": தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய த.வெ.க.

அடுத்த கட்டுரையில்
Show comments