பொங்கல் அன்று சி.ஏ பவுண்டேசன் தேர்வுகள்: தேதிகளை மாற்ற கடிதம் எழுதிய சு வெங்கடேசன் எம்பி..!

Siva
ஞாயிறு, 24 நவம்பர் 2024 (10:41 IST)
பொங்கல் தினத்தில் சிஏ பவுண்டேஷன் தேர்வுகள் நடத்தப்படும் என்று அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கு மதுரை எம் பி வெங்கடேசன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது சமூக வலைதளத்தில் கூறி இருப்பதாவது:
 
பொங்கல் திருநாள் அன்று தேர்வுகள். 
 
எத்தனை முறை சொன்னாலும் திருந்தப்போவதில்லை. 
 
அதற்காக நாம் ஓயப்போவதுமில்லை. 
 
ஒன்றிய அரசே, தேர்வு தேதியை உடனே மாற்று. 
 
தமிழ்ப் பண்பாட்டை அவமதிக்கும் செயலை கைவிடு
 
பொங்கல் அன்று சி.ஏ பவுண்டேசன் தேர்வுகள்* 
 
 *தேதிகளை மாற்றுமாறு ஒன்றிய அமைச்சருக்கும், ICAI தலைவருக்கும் கடிதம்*
 
 சி ஏ பவுண்டேஷன் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்களின் பெற்றோர் பலர் என்னைத் தொடர்பு கொண்டனர். தமிழ்நாட்டின் மக்கள் திருவிழாவான பொங்கல் (14.11.2024) அன்றும், உழவர் திருநாள் (16.11.2024) அன்றும் முறையே Business laws மற்றும் Quantitative Aptitude தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 
 
“அறுவடைத் திருநாளான" பொங்கல் திருவிழா என்பது  தமிழ்நாட்டின் தனித்துவமிக்க பண்பாட்டுத் திருவிழா என்பதை கருத்தில் கொண்டு தேர்வர்களுக்கு சிரமங்கள் இன்றி தேர்வு அட்டவணையை மாற்றி அமைக்குமாறு ஒன்றிய நிறுவன விவகாரத் துறை அமைச்சர் மாண்புமிகு நிர்மலா சீதாராமன் அவர்களுக்கும் ICAI தலைவர் சி.ஏ. ரஞ்சித் குமார் அகர்வால் அவர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளேன்
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.45 கோடி செலவில் கட்டப்பட்டு வந்த பாலம் திடீரென இடிந்தது.. 5 பேர் காயம்..!

நீதிபதி சுவாமிநாதனுக்கு ஆதரவாக களமிறங்கிய 56 ஓய்வுபெற்ற நீதிபதிகள்: அரசியல்வாதிகளுக்கு கண்டனம்..!

மெஸ்ஸியுடன் ஒரு போட்டோ எடுக்க ரூ.10 லட்சம் கட்டணமா? பொங்கியெழும் நெட்டிசன்கள்.!

கரூர் நெரிசல் விவகாரம்: உயர் நீதிமன்ற விசாரணை நடைமுறையில் தவறு.. உச்சநீதிமன்றம்

ஈரோட்டில் தவெக பொதுக்கூட்டம் நடக்குமா?!.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி!....

அடுத்த கட்டுரையில்
Show comments