Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவையில் கொரோனா மூன்றாவது அலையா? – அதிகாரிகள் விளக்கம்!

Webdunia
புதன், 9 ஜூன் 2021 (08:23 IST)
கடந்த சில நாட்களாக கோவையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மூன்றாவது அலை ஏற்பட வாய்ப்புள்ளதா என்பது குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் மிக தீவிரமாக உள்ள நிலையில் கோவையில் கடந்த சில நாட்களில் பாதிப்புகள் மற்ற மாவட்டங்களை காட்டிலும் வேகமாக அதிகரித்துள்ளது. இதுகுறித்த தொடர் நடவடிக்கைகளால் பாதிப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ள நிலையில் பரவல் விகிதமும் கட்டுப்படுத்தபட்டுள்ளது.

இதுகுறித்து கூறியுள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள் “முழு ஊரடங்கு, தொற்று பாதிப்பிற்கு விரைந்து சிகிச்சை அளித்தல் போன்றவற்றால் 50 சதவீதத்திற்கும் மேல் இருந்த பாதிப்பு தற்போது 22 சதவீதமாக குறைந்துள்ளது. ஜூலை முதல் வாரத்தில் ஆயிரத்திற்கும் கீழ் பாதிப்பு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து பாதிப்புகள் குறைந்து வந்தாலும் மூன்றாம் அலை பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எனவே பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது மாஸ்க் அணிதல், தனிமனித இடைவெளி கடைபிடித்தல், சானிட்டைசர் கொண்டு கை கழுவுதல் போன்றவற்றை பின்பற்றினால் மட்டுமே மூன்றாம் அலை தாக்கத்திலிருந்து தப்ப முடியும்” என கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஒரே இரவில் நான்கு கோவில்கள் உண்டியல் உடைப்பு- பல ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை

காட்டு யானை ரேஷேன் கடை கட்டிடத்தை உடைத்து கதவுகளை நொறுக்கி அட்டகாசம்!

அடுத்த கட்டுரையில்
Show comments