Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாற்றப்பட்ட அதிகாரி ; செயல்படும் குவாரி : அமைச்சருக்கு ஆதரவாக அரசு?

Webdunia
புதன், 2 ஆகஸ்ட் 2017 (15:52 IST)
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயாபாஸ்கருக்கு சொந்தமான குவாரி மற்றும் சொத்துக்களை முடக்கிய அதிகாரி இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல், முடக்கப்பட்டதாக கூறப்பட்ட குவாரி வழக்கம்போல் செயல்படும் அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது.


 

 
ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா செய்யப்படுவது தொடர்பாக எழுந்த புகாரை அடுத்து, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சரத்குமார், சிட்லபாக்கம் ராஜேந்திரன் உள்ளிட்ட சிலரின் வீட்டில் கடந்த ஏப்ரல் 7ம் தேதி வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, விஜயபாஸ்கர் வீட்டிலிருந்து ரூ.5 கோடி பணமும், ஆர்.கே.நகர் தொகுதி மக்களுக்கு ரூ.89 கோடி பணம் பட்டுவாடா செய்யப்பட்டதற்கான ஆவணங்களும் சிக்கியது.  
 
இதனையடுத்து, அது தொடர்பாக விஜயபாஸ்கர், சரத்குமார் உள்ளிட்டோர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் சென்று கடந்த சில நாட்களாக விளக்கம் அளித்தனர்.  
 
அந்நிலையில், விஜயபாஸ்கரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என புகார் எழுந்தது. விஜயபாஸ்கரை அழைத்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி அவரை ராஜினாமா செய்ய வேண்டும் என வற்புறுத்தியதாகவும், ஆனால், அதற்கு விஜயபாஸ்கர் மறுத்து விட்டதாகவும் அப்போது செய்திகள் வெளியானது. 
 
அதன்பின், விஜயபாஸ்கர், அவரது மனைவி மற்றும் அவரது தந்தை ஆகியோரிடம் வருமான வரித்துறையினர் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
 
அந்நிலையில், அவரின் சொந்த ஊரான திருவேங்கைவாசலில் உள்ள அவரது 100 ஏக்கர் நிலம் மற்றும் குவாரிகளை முடக்குமாறு, புதுக்கோட்டை மாவட்ட நில பதிவாளர் சசிகலாவிற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் கடிதம் அனுப்பினர். அதையடுயடுத்து, விஜயபாஸ்கரின் குவாரிக்கு சீல் வைக்கப்பட்டது. மேலு, அவருக்கு சொந்தமான நிலங்களை சசிகலா முடக்கினார்.
 
இந்நிலையில், பதிவாளர் சசிகலாவை விருதுநகர் மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல், சீல் வைக்கப்பட்ட குவாரி இன்று வழக்கம்போல் செயல்படுகிறது என்பதும் தெரியவந்துள்ளது.
 
தன்னுடைய கடமையை செய்யும் சசிகலா போன்ற நேர்மையாக செயல்படும் அதிகாரிகளை, அதிகாரம் மிக்க அரசு தங்களின் சுயலாபத்திற்காக பழிவாங்கி வருவதாக சமூக வலைத்தளங்களில் கருத்து பரவி வருகிறது.

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments