Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் தான் அதிமுக பொருளாளர்: வங்கிகளுக்கு ஓபிஎஸ் கடிதம்!

Webdunia
செவ்வாய், 12 ஜூலை 2022 (12:27 IST)
நான் தான் அதிமுக பொருளாளர் என்றும் என்னுடைய கையெழுத்து இருந்தால் மட்டுமே வங்கி பரிவர்த்தனை செய்ய வேண்டும் என்றும் வங்கிகளுக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
கடந்த சில நாட்களாக ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இடையே பெரும் பிரச்சனை ஏற்பட்டுள்ள நிலையில் நேற்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார்.
 
மேலும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொருளாளர் ஓபிஎஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து திண்டுக்கல் சீனிவாசன் அதிமுகவில் புதிய பொருளாளராக தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
 
இந்த நிலையில் அதிமுக வரவு செலவு கணக்கு வைத்துள்ள வங்கிகளுக்கு ஓ பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். அதில் நான் தான் அதிமுகவின் பொருளாளர் என்றும் வேறு யாரையும் அதிமுக வரவு செலவுகளை அனுமதிக்கக் கூடாது என்றும் எழுதியுள்ளார்.
 
புதிய பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் என வங்கிகளுக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதிய நிலையில் ஓபிஎஸ் இந்த கடிதத்தை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுகவுக்கு வேண்டப்பட்டவர்கள் பயனடையும் திட்டங்கள்: பட்ஜெட் குறித்து அண்ணாமலை

எல்லோர்க்கும் எல்லாம் என்ற உயரிய நோக்கில் தமிழ்நாடு பட்ஜெட்: முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 10,000 தான். எப்படி 40,000 நிரப்ப முடியும்? ஈபிஎஸ் கேள்வி

ஜவாஹிருல்லாவிற்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு..!

தி.மு.க. அரசு கடன் வாங்குவதில் சளைத்தது அல்ல: பட்ஜெட் குறித்து ஈபிஎஸ் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments