வட போச்சே... புகைச்சலில் ஓபிஎஸ் அண்ட் கோ?

Webdunia
செவ்வாய், 11 ஆகஸ்ட் 2020 (13:29 IST)
அடுத்த முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி என கூறப்பட்டிருப்பது ஓ.பன்னீர்செல்வம் ஆதர்வாளர்களுக்கு அதிருபதியை ஏற்படுத்தியுள்ளது. 
 
தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற சில மாதங்களே உள்ள நிலையில் தேர்தல் பணிகளில் தமிழக அரசியல் கட்சிகள் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றன. இந்நிலையில் அதிமுகவின் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என கேள்வி எழுந்தது. 
 
இதற்கு அமைச்சர் செல்லூர் ராஜூ கூறும்போது வெற்றி பெறும் எம்.எல்.ஏக்கள் சேர்ந்து முதல்வரை தேர்வு செய்வோம் என கூறினார். ஆனால் அவரது கருத்தை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மறுத்துள்ளார். தேர்தலுக்கு பிறகு முதல்வரை தேர்வு செய்வதால் பிரச்சினை ஏற்படும் என கூறியுள்ள அவர் என்றென்று முதல்வர் வேட்பாளராக எடப்பாடியார்தான் இருப்பார் என கூறியுள்ளார். 
 
அதே சமயம் ராஜேந்திர பாலாஜியின் கருத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு அதிருப்தி இருப்பதாக தெரிகிறது. என்ன இருந்தாலும் சசிகலா நியமித்த எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதல்வர் வேட்பாளராக்கப்படுவது நியாமானதில்லை என அவர்கள் கருதுவதாக தெரிகிறது. முன்பை போல மத்தியும் பன்னீர்செல்வத்தின் மவுசு குறைந்துவிட்டதால் இப்படி கூறப்படுகிறதோ எனவும் சந்தேகங்கள் எழுந்துள்ளது. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்யார்' புயல் உருவானது: வானிலை ஆய்வு மையம் தகவல்.. தமிழகத்திற்கு பாதிப்பா?

இந்தியா ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு அல்ல, அனைவருக்கும் சொந்தமானது: முதல்வர் ஸ்டாலின்

2 நாள் சரிவுக்கு பின் இன்று ஒரே நாளில் உச்சத்திற்கு சென்ற பங்குச்சந்தை: இன்றைய நிப்டி நிலவரம்..!

தொடர் ஏற்றத்தில் தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.95,000ஐ நெருங்கியதால் மக்கள் அதிர்ச்சி.!

கண்டுகொள்ளாத பாஜக!.. கடுப்பில் செங்கோட்டையன்!. தவெகவில் இணைவதன் பின்னணி!...

அடுத்த கட்டுரையில்
Show comments