Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தண்ணீர் பெறுவதற்கு ஓ. பன்னீர் செல்வம் குடும்பம் தடை ! - தினகரன் குற்றச்சாட்டு !

Webdunia
திங்கள், 29 ஜூலை 2019 (14:43 IST)
அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தன் கட்சியை பதிவு செய்ய மும்மரம் காட்டி வருவதால், வரும் வேலூர் மக்களவைத் தேர்தலில் அவரது கட்சி போட்டியிடவில்லை.
இந்நிலையில் மதுரை  வந்த தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது :
 
மத்திய அரசின் கீழ் செயல்படும் தேசிய புலனாய்வு முகமை அரசு தூண்டுதலில் செயல்படக்கூடாது. நடுநிலையுடன் செயல்பட வேண்டும். மத்திய அரசின் நிதியை திருப்பி அனுப்புவதன் மூலமாக தமிழக அரசின் மோசமான செய்பாடுகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.தமிழக அரசு சிறுபான்மையினருக்கு ஆதரவாக உள்ளதா என்று தெரிவிக்கவேண்டும்.
 
மேலும் முத்தலாக் விவகாரத்தில் தமிழர்களின் நிலைப்பாட்டை இஸ்லாமியர்கள்  நன்றாக புரிந்துவைத்துள்ளனர்.அதன் தலைமையும்  முரண்டாடாகத்தான் இருக்கிறது. முல்லை பெரியாறு அணையில் இருந்து, வைகை அணைக்கு நீர் கொண்டு செல்லப்பட்டு மதுரையின் குடி நீர் தேவையை பூர்த்தி செய்கிறது. இந்த வைகை குடிநீர் திருட்டுக்கு ஓ.பி.எஸ். குடும்பத்துக்கு தொடர்பு உள்ளது. பெரியாறிலிருந்து விவசாயிகள் தண்ணீர் பெறுவதில் ஓ.பி.எஸ் குடும்பம் தடுக்கக்கூடாது. வரும் வேலூர் தேர்தலில் அதிமுக அரசுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்’ இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாரம் முழுவதும் நெகட்டிவ்.. இன்றும் பங்குச்சந்தை சரிவு.. முதலீட்டாளர்கள் அச்சம்..!

சிறையில் உள்ள சவுக்கு சங்கர் மீது இன்னொரு வழக்கு: மீண்டும் கைது செய்த போலீசார்..!

6 ஆண்டுகளுக்கு பின் பேருந்து கட்டணம் உயர்வு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

பொங்கல் தினத்தில் யுஜிசி நெட் தேர்வு தேதிகள் அறிவிப்பு.. கடும் எதிர்ப்பு கிளம்புமா?

சென்னை உள்பட 6 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்

அடுத்த கட்டுரையில்
Show comments