Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படாது - அரசு அறிவிப்பு!

Webdunia
சனி, 23 அக்டோபர் 2021 (11:33 IST)
தமிழகத்தில் நவம்பர் 1 ஆம் தேதி மழலையர், நர்சரி பள்ளிகள் திறக்கப்படாது என அரசு தெரிவித்துள்ளது. 

 
கொரோனா காரணமாக தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ள நிலையில் அவ்வபோது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அவ்வாறாக சமீபத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. அதில் வார இறுதி நாட்களில் கோவில் திறப்பது குறித்த அறிவிப்புடன், நர்சரி, ப்ரைமரி பள்ளிகளை திறக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது.
 
இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்து அமைச்சர் அன்பில் மகேஷ், தமிழக அரசின் அறிவிப்பில் நர்சரி பள்ளிகள் திறப்பு குறித்து வெளியான அறிவிப்பு தவறுதலாக வெளியானது. நர்சரி, ப்ரைமரி பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.
 
இதனைத்தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பில் தமிழகத்தில் நவம்பர் 1 ஆம் தேதி மழலையர், நர்சரி பள்ளிகள் திறக்கப்படாது என அரசு தெரிவித்துள்ளது. மழலையர், நர்சரி பள்ளிகளை தற்போதைக்கு திறக்கும் முடிவு இல்லை. இது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

பிரதமர் மோடி எடுக்கும் முடிவை ஏற்று கொள்வேன்: முதல்வர் பதவி குறித்து ஷிண்டே..!

ஆடு மேய்த்து கொண்டிருந்தவர்கள் மீது மோதிய கார்.. 5 பெண்கள் உயிரிழப்பு..

சென்னை அருகே அம்மா உணவகத்தில் சீலிங் இடிந்து விழுந்ததால் பரபரப்பு... பெண் காயம்

லெபனான் - இஸ்ரேல் போர் முடிவுக்கு வந்தது: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments