Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிர்வாண நிலையில் இறந்து கிடந்த துணை நடிகை ஜெயஸ்ரீ

Webdunia
திங்கள், 5 டிசம்பர் 2016 (10:19 IST)
தொலைக்காட்சி நடிகை சபர்ணாவை போன்றே துணை நடிகை ஜெயஸ்ரீயின் உடலும் லேசாக அழுகிய நிலையில் நிர்வாணமாக கிடந்துள்ளது. சேலத்தை சேர்ந்தவர் ஜெயஸ்ரீ(49). துணை நடிகை. தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் சில விளம்பரங்களில் நடித்துள்ளார்.



சென்னை சாலிகிராமத்தில் உள்ள பெரியார் வீதியில் வசித்து வந்தார். அவருக்கு திருமணமாகவில்லை. இந்நிலையில் அவர் வீட்டில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

போலீசார் விசாரனையில் அக்கம்பக்கத்தினர் ஜெயஸ்ரீயை  கடந்த வெள்ளிக்கிழமை பார்த்துள்ளனர். அப்போது ஜெயஸ்ரீ பால்கனியில் நின்றுள்ளார். அதன் பிறகு இரண்டு நாட்களாக அவரை யாரும் பார்க்கவில்லை. ஜெயஸ்ரீயின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வந்ததால் அக்கம்பக்கத்தினர் நேற்று போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தபோது வீட்டின் கேட் வெளியே பூட்டியிருந்ததாகவும், ஆனால் கதவு பாதி திறந்திருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
 
இதனை தொடர்ந்து ஜெயஸ்ரீ படுக்கையறையில் நிர்வாண நிலையில் இறந்து கிடந்ததை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அந்த அறையில் ஆணுறை ஒன்றும் கிடந்துள்ளது. ஜெயஸ்ரீயை தலையணை வைத்து முகத்தை அழுத்தி கொலை செய்திருப்பது போன்று உள்ளது என்று முதல் கட்ட விசாரணைக்கு பிறகு போலீசார் தெரிவித்துள்ளனர்.
 
இந்நிலையில் சேலம் மாநகராட்சியில் வேலை செய்யும் அவரின் சகோதரர் செல்வராஜ் போலீசாரிடம் கூறியிருப்பதாவது, ஜெயஸ்ரீயின் வீட்டு பீரோவில் இருந்த 50 பவுன் தங்க நகைகளை காணவில்லை. ஆனால் அவர் அணிந்திருந்த கவரிங் நகைகள் அப்படியே உள்ளது என்று கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு தேர்வில் 100-க்கு 101.66 மதிப்பெண்: முறைகேடு நடந்திருப்பதாக கூறி தேர்வர்கள் போராட்டம்..!

இந்தியா அமெரிக்காவுக்கு வரி விதித்தால், அமெரிக்காவும் இந்தியாவுக்கு வரி விதிக்கும்: டிரம்ப்

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை மீறி கடலுக்குள் பாய்ந்த கார்.. சென்னை துறைமுகத்தில் பரபரப்பு..!

இன்று காலை 10 மணி வரை சென்னை உள்பட எத்தனை மாவட்டங்களில் கனமழை? வானிலை எச்சரிக்கை..!

கேரளாவில் இருந்து கொண்டு வந்த குப்பைகளை திருப்பி அனுப்பி வைக்க வேண்டும்: பிரேமலதா

அடுத்த கட்டுரையில்
Show comments