Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தற்போது திமுகவில்; பிறகு தேமுதிகவில்!: திருநாவுக்கரசர் மாஸ்டர் பிளான்

Webdunia
திங்கள், 17 அக்டோபர் 2016 (15:00 IST)
எதிர்காலத்தில் அவசியம் ஏற்பட்டால், மக்கள் நலனுக்காக தேமுதிகவுடன் இணைந்து ஒரே களத்தில் நின்று போராடுவோம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.


 
நேற்று ஞாயிற்றுக்கிழமை மதியம் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர், தேமுதிக தலைவர் விஜயகாந்தை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் நடைபெற்றது.
 
பின்னர் நிரூபர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், ”தேமுதிக தலைவர் விஜயகாந்தை மரியாதை நிமித்தமாக, நட்பு ரீதியில் சந்தித்தேன். அப்போது உள்ளாட்சி தேர்தல் மற்றும் தற்போது இருக்கிற பொதுவான அரசியல் விஷயங்கள் குறித்து பேசினோம்.
 
தேமுதிக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்து இருக்கிறார்கள். காங்கிரசை பொறுத்தவரையில் திமுகவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதற்குள் உள்ளாட்சி தேர்தலுக்கு நீதிமன்றம் தடை விதித்து விட்டது.
 
தேமுதிகவுடன் இணைவு:
 
எதிர்காலத்தில், மதுவிலக்கு போன்ற போராட்டங்கள் வரும்போது, அதற்கான தேவை ஏற்படும்போது அவசியம் ஏற்பட்டால், மக்கள் நலனுக்காக தேமுதிகவுடன் இணைந்து ஒரே களத்தில் நின்று போராட்டம் நடத்துவோம்” என்று கூறியுள்ளார்.

ஒரே நாளில் தமிழகம் வரும் பிரதமர் மோடி மற்றும் அமைச்சர் அமித்ஷா.. என்ன காரணம்?

தங்கையிடம் அத்துமீறிய 17 வயது இளைஞன்.. தட்டிக்கேட்ட 13 வயது சிறுவன் கொடூர கொலை!

குமரியில் பிரதமர் மோடி இரவு பகலாகக் தியானம் - பிரதமர் அலுவலகம் தகவல்..!

இந்தியாவில் விற்பனைக்கு வந்தது சாம்சங் கேலக்சி F55..! அதிரடி விலை.!!

பழநி முருகன் கோயிலில் மே 30ஆம் தேதி ரோப் கார் சேவை நிறுத்தம்! என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments