Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

3 ஆண்டுகளில் கலப்புத் திருமணம் செய்த 81 பேர் பலி - ஆணவக் கொலையை தடுக்க தனிச்சட்டம்?

3 ஆண்டுகளில் கலப்புத் திருமணம் செய்த 81 பேர் பலி - ஆணவக் கொலையை தடுக்க தனிச்சட்டம்?
, வியாழன், 28 ஜூலை 2016 (14:35 IST)
தமிழகத்தில் ஆணவக் கொலைகளை தடுப்பதற்கான தனிச்சட்டம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் மத்திய - மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
 

 
இந்திய மக்கள் மன்றத் தலைவரான வாராகி என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆணவக் கொலைகளைத் தடுக்கக் கோரி மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
 
அதில், “கடந்த 2003-ல் கலப்புத் திருமணம் செய்தவிருத்தாச்சலம் தம்பதி முருகேசன்- கண்ணகி முதல், திருச்செங்கோடு கோகுல்ராஜ், மன்னார்குடி அமிர்தவள்ளி- பழனியப்பன், சமீபத்தில் உடுமலைப்பேட்டை சங்கர் எனதொடர்ச்சியாக ஆணவக் கொலை செய்யப் பட்டு வருகின்றனர்.
 
கடந்த 3 ஆண்டுகளில் கலப்புத் திருமணம் செய்த 81 பேர் இறந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. ஆணவக்கொலைகள் நடந்தால், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரும், காவல் கண்காணிப்பாளரும்தான் பொறுப்பேற்க வேண்டும். அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கலாம் என உச்சநீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது.
 
எனவே, தமிழகத்தில் ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் இயற்ற முதலமைச்சருக்கும், எதிர்க்கட்சித் தலைவருக்கும் உத்தரவிட வேண்டும். அதுபோல வன்கொடுமை அதிகம் உள்ள இடங்களில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கு தற்காப்பு ஆயுதம் வழங்க வேண்டும் என்று வாராகி அந்த மனுவில் கூறியிருந்தார்.
 
இந்த மனுவை அண்மையில் விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் இதுகுறித்து தமிழக அரசும், எதிர்க்கட்சியான திமுக மற்றும் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை புதன்கிழமைக்கு ஒத்திவைத்திருந்தனர்.
 
அதன்படி, நேற்று புதனன்று மீண்டும் விசாரணை நடைபெற்றது. அப்போது, ஆணவக் கொலையை தடுக்க தனிச்சட்டம் கொண்டு வருவதில்மத்திய அரசுக்கும் பங்கு வேண்டும்; எனவே இந்த வழக்கில் மத்திய அரசையும் எதிர் மனுதாரராக சேர்ப்பதாக எஸ்.கே. கவுல் தலைமையிலான அமர்வு, 6 மாதத்திற்குள் இந்த மனுவுக்கு பதில் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’ஆங்கிலத்தில் பேசியது புரியவில்லை’ - கருணாஸின் கருத்துக்கு திமுக எதிர்ப்பு