Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் கொலைகள் நடக்காத நாளே இல்லை.! ஜனவரி முதல் 565 கொலைகள்.! பட்டியலிட்ட இபிஎஸ்..

Senthil Velan
ஞாயிறு, 28 ஜூலை 2024 (13:30 IST)
தமிழகத்தில் கொலை நடக்காத நாளே இல்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டி உள்ளார்.
 
தூத்துக்குடி விமான நிலையத்தில், செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி,  போதை பொருட்களால் தமிழகத்தில் நாளுக்கு நாள் கொலைகள் அதிகரித்து வருவதாக தெரிவித்தார்.  கசாப்பு கடைகளில் ஆடுகளை வெட்டுவது போல் மனிதர்களை வெட்டுவது அதிகரித்துள்ளது என்றும்  தமிழகம் கொலை மாநிலமாக மாறி உள்ளது கவலை அளிக்கிறது என்றும் அவர் கூறினார். 
 
மேலும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக விமர்சித்த எடப்பாடி பழனிச்சாமி, போலீசாருக்கு முழு சுதந்திரம் அளித்து, சட்டம் ஒழுங்கை சீர்குலைவை தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஜனவரி 1ம் தேதி முதல் இதுவரை 565 கொலைகள் நடந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
 
தமிழகத்தில் கொலை நடக்காத நாளே இல்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார். தமிழகத்தில் அரசியல் பிரமுகர்கள் மற்றும் பெண்கள் என யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்றும்  தி.மு.க., மீது தமிழக மக்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ALSO READ: அதிமுக வார்டு செயலாளர் ஓட ஓட விரட்டி கொலை.! கடலூரில் பதற்றம்..!

தங்கள் மீதான கோபத்தை மறைக்க மத்திய அரசு மீது தி.மு.க., குற்றம் சாட்டுகிறது என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிகரிக்கும் கொலை சம்பவம்! ரவுடிகளை சுட்டுப்பிடிக்க உத்தரவு! - உஷார் நிலையில் காவல்துறை!

தமிழகத்தின் ஒவ்வொரு பூத்திலும் தண்ணீர், மோர் பந்தல்கள்: அண்ணாமலை

பசுமாட்டை கடித்து குதறிய தெருநாய்கள்.. பரிதாபமாக இறந்த பசுமாடு..!

கொலைய லிஸ்ட் போடுறதுதான் திமுகவின் சாதனை! எடப்பாடியார் ஆவேசம்! அதிமுக வெளிநடப்பு!

டாஸ்மாக் விவகாரம்: அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு தடை விதித்த சென்னை உயர்நீதிமன்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments