Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னைக்கு இதுதான் கடைசி மழையாக இருக்கும்: தமிழ்நாடு வெதர்மேன்..!

Mahendran
வியாழன், 12 டிசம்பர் 2024 (17:28 IST)
சென்னையில் தற்போது பெய்து வரும் மழை தான் வடகிழக்கு பருவ  மழையின் கடைசி மழையாக இருக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் கணித்துள்ளார்.

வங்கக் கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பரவலாக மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது.

மேலும், அடுத்த சில மணி நேரத்தில் 33 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பதும் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூக வலைதளப் பதிவில் சென்னையில் தற்போது பெய்து வரும் கனமழை படிப்படியாக குறைந்து விடும் என்றும் அனேகமாக வடகிழக்கு பருவமழையின் கடைசி மழையாக சென்னைக்கு இருக்கும் என்றும் தெரிவித்தார்.

மேலும், மழை படிப்படியாக குறைந்து முழுமையாக இன்னும் சில நாட்களில் நின்று விடும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் செத்துட்டேன்னு யார் சொன்னது? வீடியோவில் வந்து ஷாக் கொடுத்த நித்யானந்தா!

இன்று திடீரென மீண்டும் சரியும் சென்செக்ஸ், நிப்டி.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

ரூ.70,000ஐ நெருங்கும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 400 ரூபாய் உயர்வு..!

வேணாம் ட்ரம்ப்பே.. வேற மாதிரி ஆயிடும்!? - அமெரிக்காவின் வரிவிதிப்புக்கு உலக நாடுகளின் ரியாக்‌ஷன்!

தாய்க்கு பதிலாக தேர்வு எழுதிய மகள்! 10ம் வகுப்பு தேர்வில் ஆள்மாறாட்டம்!

அடுத்த கட்டுரையில்
Show comments