’போர் பயிற்சியை நிறுத்துறீங்களா..? ஏவுகணைய எடுக்கட்டுமா?’ – அமெரிக்காவுக்கு எச்சரிக்கை!

Webdunia
புதன், 2 நவம்பர் 2022 (08:27 IST)
தென் கொரியாவுடன் இணைந்து அமெரிக்கா மேற்கொண்டு வரும் கூட்டு போர் பயிற்சிக்கு வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக வடகொரியா மேற்கொண்டு வரும் ஏவுகணை சோதனைகள் அண்டை நாடுகளான தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளை அச்சுறுத்தி வருவதோடு, உலக நாடுகளின் எதிர்ப்பையும் சம்பாதித்துள்ளது.

இதனால் அமெரிக்கா, வடகொரியா மீது பொருளாதார தடையை விதித்தது. அதற்கெல்லாம் அஞ்சாத வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் தற்போது அமெரிக்க ராணுவம் தென்கொரிய ராணுவத்துடன் இணைந்து கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.

ALSO READ: 63.59 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!

இந்த கூட்டு ராணுவ போர் பயிற்சிக்கு வடகொரியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து எச்சரிக்கை விடுத்து செய்தி வெளியிட்டுள்ள வடகொரிய வெளியுறவுத்துறை “அமெரிக்க தனக்கு பாதுகாப்பு இல்லாத எந்த தீவிரமான முன்னேற்றங்களையும் விரும்பவது இல்லையென்றால் தனது கூட்டு போர் பயிற்சிகளை நிறுத்த வேண்டும். இல்லையென்றால் அனைத்து விளைவுகளுக்கும் அமெரிக்கா பழியை ஏற்க வேண்டி வரும். ஆத்திரமூட்டும் செயல்கள அமெரிக்கா தொடர்ந்து மேற்கொண்டால் தக்க பதிலடி நடவடிக்கையை கையில் எடுப்போம்” என தெரிவித்துள்ளது.

ஆனால் இந்த அறிவிப்புகள் குறித்து அலட்டிக் கொள்ளாத அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் 100 போர் விமானங்கள் தீவிர கூட்டு ராணுவ போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Edited By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய்யை மொத்தமாக காலி செய்ய வேண்டும் என நினைக்கிறார்கள்: டாக்டர் கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு

தமிழகத்தை மீட்போம்' பிரச்சாரம்: எடப்பாடி பழனிசாமியின் பொதுக்கூட்டங்கள் திடீர் ரத்து.. என்ன காரணம்?

திருப்பதியில் கனமழை வெள்ளம்: நிலச்சரிவு அபாயம்: தேவஸ்தான ஊழியர்களுக்கு அவசர எச்சரிக்கை!

கச்சா குண்டு தயாரிப்பின்போது ஏற்பட்ட விபத்து. உடல் சிதறி ஒருவர் பலி!

அடுத்த கட்டுரையில்
Show comments