போராட்டத்திற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை: இறந்த மாணவியின் பெற்றோர் தகவல்!

Webdunia
ஞாயிறு, 17 ஜூலை 2022 (13:15 IST)
போராட்டத்திற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை: இறந்த மாணவியின் பெற்றோர் தகவல்!
சமீபத்தில் சின்னசேலம் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த மாணவி ஒருவர் திடீரென தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில் இந்த மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் இது குறித்து விசாரணை செய்ய வேண்டும் என்றும் மாணவியின் பெற்றோர்கள் போராட்டம் நடத்தினர்
 
இந்த போராட்டம் திடீரென வன்முறையாக வெடித்தது என்பதும் பள்ளி பேருந்துகளுக்கு போராட்டக்காரர்கள் தீவைத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து பள்ளி அருகில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்
 
இந்தநிலையில் தற்போது நடைபெற்று வரும் போராட்டத்திற்கு மாணவியின் உறவினர்கள் யாரும் பங்கேற்கவில்லை என மாணவியின் வழக்கறிஞர் தகவல் தெரிவித்துள்ளார் 
 
வன்முறை வெடித்ததால் உறவினர்கள் பாதி வழியில் திரும்பி விட்டனர் என்றும் போராட்டத்துக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை என்றும் போராட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் மாணவி தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு மாநாட்டில் தவெகவில் இணையும் விசிக, அதிமுக மற்றும் திமுக பிரபலங்கள்? பரபரப்பு தகவல்..!

பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் நிலையங்களில் புதிய வசதி.. ஆள் உயர தடுப்பு கதவுகள்..!

பறப்பதை பிடிக்க ஆசைப்பட்டு இருப்பதை கைவிட கூடாது.. விஜய் கூட்டணி குறித்து திருநாவுக்கரசர்..!

அன்புமணியின் இன்றைய போராட்டமும், அதில் இருக்கும் அரசியலும்.. யார் யார் கலந்து கொண்டனர்?

குடிமைப்பணி தேர்வு: தேர்வர்களுக்கு 5 ஆயிரம் உதவித்தொகை!.. விண்ணப்பிப்பது எப்படி?...

அடுத்த கட்டுரையில்
Show comments