காவிரி மேம்பாட்டு ஆணையம் சாத்தியமில்லை; நீர்வளத்துறை அமைச்சர் தடாலடி

Webdunia
செவ்வாய், 27 பிப்ரவரி 2018 (17:40 IST)
காவிரி மேம்பாட்டு ஆணையம் அமைப்பது சாத்தியமில்லை என்று மத்திய மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார்.
 
சென்னை ஐஐடியில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்துக்கொள்ள மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்காரி தமிழக வந்தார். காவிரி பிரச்ச்சனையில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் காவிரி மேம்பாட்டு ஆணையத்தை அமைப்பது இப்போதைக்கு சாத்தியமில்லை என்று பேட்டி ஒன்றில் கூறினார்.
 
காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து தமிழகத்தில் அனைத்து கட்சிகள் சார்ப்பில் கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து கட்சி தலைவர்களும் பிரதமரை நேரில் சந்தித்து உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க வலியுறுத்த வேண்டும் என தீர்மானம் நிரைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்காரி காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க சாத்தியமில்லை என்று கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் காவிரி விவகாரத்தில் தமிழக உரிமையை பெற்றுத்தருவோம் என்று உறுதியளித்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments