நாளை முதல் நேரக்கட்டுப்பாட்டுடன் திறக்கப்படுகிறதா டாஸ்மாக்: அதிர்ச்சி தகவல்

Webdunia
திங்கள், 30 மார்ச் 2020 (12:10 IST)
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் காரணத்தால் மதுபான கடைகளும் மூடப்பட்டு இருப்பதால் குடிமகன்கள் பெரும திண்டாட்டத்தில் உள்ளனர். கேரளாவில் மது பானங்கள் கிடைக்காத சோகத்தில் ஏழு குடிமகன்கள் தற்கொலை செய்து கொண்டதாக வந்த தகவலை அடுத்து டாக்டர் பரிந்துரை சீட்டின் அடிப்படையில் மதுபானங்கள் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் தெரிவித்தார்
 
இந்த நிலையில் தமிழகத்தில் வரும் 31ம் தேதி முதல் நேர கட்டுப்பாட்டுடன் டாஸ்மாக் கடைகள் இயங்கும் என வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவியது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் கிர்லோஷ்குமார் அவர்கள் ’மார்ச் 31-ஆம் தேதி முதல் டாஸ்மாக் திறக்கப்படும் என்பது வதந்தியே என்றும், ஊரடங்கு உத்தர்வு முடியும் வரை தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என்றும் கூறியுள்ளார். இதனை அடுத்து மார்ச் 31 ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்பது வதந்தி என்பது உறுதியாகி உள்ளது
 
ஏப்ரல் 14ஆம் தேதிக்கு பின்னர் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்க திட்டமில்லை என மத்திய அரசு தெரிவித்திருப்பதால் தமிழகத்தில் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக தங்கத்தையே கொடுத்தாலும் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்: செல்லூர் ராஜு

இருமுடி கட்டி போவாங்க! விஜய் ரசிகர் செய்த செயலால் கடுப்பான நெட்டிசன்கள்

கொல்கத்தா நிகழ்வின்போது ஏற்பட்ட குழப்பம்.. மெஸ்ஸியிடம் மம்தா பானர்ஜி வருத்தம்!

யூடியூபர் சவுக்கு சங்கர் மீண்டும் கைது: வீட்டின் கதவை உடைத்து கைது செய்ததாக தகவல்..!

கொல்கத்தா சால்ட் லேக் மைதானத்தில் மெஸ்ஸி ரசிகர்கள் ரகளை: ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments