Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுவையில் இனி தமிழ்நாடு பாடத்திட்டம் இல்லை: அமைச்சர் நமச்சிவாயம்..!

Siva
திங்கள், 12 ஆகஸ்ட் 2024 (11:45 IST)
புதுவையில் கடந்த பல ஆண்டுகளாக தமிழ்நாடு பாடத்திட்டம் கடைபிடிக்கப்பட்டு வந்த நிலையில் இனி புதுவையில் தமிழ்நாடு பாடத்திட்டம் இல்லை என்றும் அனைத்து பள்ளிகளிலும் சிபிஎஸ்இ பாடத்திட்டம் தான் மாற்றப்பட்டுள்ளது என்றும் புதுவை கல்வி அமைச்சர் நமச்சிவாயம் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுவையில் பல ஆண்டுகளாக தமிழ்நாடு பாடத்திட்டம் தான் கடைபிடிக்கப்பட்டு வருகிறது என்பதும் தமிழ்நாடு பாடத்திட்டத்தின் படி தான் பத்தாம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு பொது தேர்வு நடத்தப்பட்டு வந்தது என்பது தெரிந்தது.

இந்த நிலையில் புதுவையில் படிப்படியாக அனைத்து பள்ளிகளிலும் சிபிஎஸ்இ பாடத்திட்டம் மாற்றப்பட்டு வந்த நிலையில் தற்போது முழுமையாக சிபிஎஸ்சி பாடத்திட்டம் மாற்றப்பட்டு விட்டதாகவும் புதுச்சேரியில் இனிமேல் தமிழ்நாடு பாடத்திட்டம் எந்த பள்ளியிலும் கிடையாது என்றும் சட்டப்பேரவையில் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் புதுவையில் அனைத்து பள்ளிகளிலும் சிபிஎஸ்சி பாடத்திட்டம் அமலுக்கு வந்தாலும் அந்த பாடத்திட்டத்தில் பயில விரும்பாத மாணவர்களுக்கு தமிழ்நாடு பாடத்திட்டத்தின் கீழ் படிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால் அந்த கோரிக்கைக்கு மறுப்பு தெரிவித்து இனி அனைத்து பள்ளிகளிலும் சிபிஎஸ்இ பாடத்திட்டம் மட்டுமே கடைபிடிக்கப்படும் என்று அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

Edited by Siva

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments