Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் நாளை எந்த தளர்வும் கிடையாது: காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அறிவிப்பு

Webdunia
சனி, 20 ஜூன் 2020 (19:45 IST)
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாகி கொண்டே இருப்பதால் இந்த நான்கு மாவட்டங்களில் மட்டும் ஜூன் 19 முதல் ஜூன் 30 வரை முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாக தமிழக அரசு சமீபத்தில் அறிவித்தது
 
இதனையடுத்து நேற்று முதல் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முழு ஊரடங்கில் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே அத்தியாவசிய கடைகள் திறந்து இருக்க வேண்டும் என்றும் தேவை இன்றி வெளியே யாரும் வரக்கூடாது என்றும் இபாஸ் இல்லாமல் வாகனங்கள் சாலைகளில் செல்ல அனுமதிக்க படாது என்றும் காவல்துறையினர் எச்சரித்திருந்தார்கள்,
 
இருப்பினும் காவல்துறையினர் எச்சரிக்கையை மீறி வாகனங்களில் வந்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த முழு ஊரடங்கு அறிவிப்பு நாளன்றே ஜூன் 21 மற்றும் ஜூன் 28 ஆகிய இரண்டு ஞாயிற்றுக்கிழமை முழுமையான முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும் என்றும் அன்றைய தினம் சென்னையில் எந்த தளர்வும் இருக்காது என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது 
 
இதனை அடுத்து நாளை ஞாயிற்றுக்கிழமை முழுமையான ஊரடங்கு என்பதை காவல்துறை ஆணையர் ஏகே விஸ்வநாதன் அவர்கள் மீண்டும் பொதுமக்களுக்கு ஞாபகப்படுத்தி உள்ளார். எனவே நாளை எந்த தளர்வும் கிடையாது என்பதால் பொதுமக்கள் அனைவரும் நாளை ஞாயிறு அன்று வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

தொடர்புடைய செய்திகள்

நாய்கள் மட்டுமல்ல, மாடுகள் வளர்த்தாலும் லைசென்ஸ் வேண்டுமா? சென்னை மாநகராட்சி அதிரடி

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு.. புயலாக மாறுமா? வானிலை மையம் தகவல்..!

முதல்முறையாக வாக்களித்த நடிகர் அக்சய்குமார்.. யாருக்கு வாக்கு என பேட்டி..!

விவசாயி வங்கிக் கணக்குக்கு திடீரென வந்த ரூ.9900 கோடி! என்ன நடந்தது?

ஸ்வாதி மாலிவால் பாஜக-வில் இணைகிறாரா? ஜேபி நட்டாவிடம் மறைமுக பேச்சுவார்த்தையா?

அடுத்த கட்டுரையில்
Show comments