நவம்பர் 12ம் தேதி வரை கனமழை இல்லை - வானிலை மையம் தகவல்

Webdunia
வியாழன், 9 நவம்பர் 2017 (13:17 IST)
தமிழகத்திற்கு வருகிற 12ம் தேதி வரை கனமழை எச்சரிக்கை எதுவுமில்லை என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.


 

 
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதன் விளைவாக கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக சென்னை, கடலூர், நாகை, திருவள்ளூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் அவ்வப்போது கனமழை பெய்து வந்தது. 
 
ஆனால், நேற்று முதல் தமிழகத்தில் பெரிதாக எங்கும் மழை பெய்யவில்லை. இன்றும் தமிழகத்தின் பல இடங்களில் வெயில் அடிக்கிறது.
 
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் “அரபிக்கடலில் கேரளா பகுதியில் உருவாகியுள்ள மேல் அடுக்கு சுழற்சியால், கேரள எல்லையில் உள்ள தமிழக பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புண்டு. தென் மாவட்டங்களில் பல இடங்களில் மிதமான மழை இருக்கும். ஆனால், தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என தெரிவித்தார்.
 
அதேபோல், இந்திய வானிலை மையம் நேற்று மாலை வெளியிட்ட அறிக்கையில் “அந்தமான் தீவுகளில் இன்று கனமழை பெய்யும். மற்ற இடங்களுக்கு வருகிற 12ம் தேதி வரை கனமழை எச்சரிக்கை எதுவுமில்லை” என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா எங்கள் மீது தாக்குதல் நடத்தினால் சவுதி அரேபியா எங்களுக்கு உதவும்: பாகிஸ்தான் அமைச்சர்.

எச்-1பி விசா கட்டண உயர்வு: அமேசான், டிசிஎஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு பெரும் பாதிப்பு?

விரைவில் ஹைட்ரஜன் குண்டு வெடிக்கும்: வாக்கு திருட்டு குறித்து ராகுல் காந்தி..!

"சொன்னதைச் செய்தார்களா?" திருச்சியை அடுத்து நாகையிலும் பட்டியலிட்ட விஜய்..!

இந்த பூச்சாண்டி எல்லாம் வேண்டாம்.. கெத்தாக தேர்தலை சந்திக்க வாருங்கள்: ஸ்டாலினுக்கு விஜய் சவால்..!

அடுத்த கட்டுரையில்
Show comments