Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சும்மா உதார் விடாதீங்க... தமிழகத்திற்கு நோ மழை - இது புது அப்டேட்!

Webdunia
வியாழன், 13 டிசம்பர் 2018 (19:51 IST)
தென்கிழக்கு வங்க கடல் மற்றும் இந்திய கடல் பகுதியில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரம் அடைந்து காற்றழுத்தமாகி, அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாற உள்ளது. 
 
இது ஆந்திரா, வடக்கு தமிழகம் நோக்கி நகர வாய்ப்புள்ளது. இதனால் 14 மற்றும் 15 ஆம் தேதிகளில் தமிழகத்தின் கடலோர பகுதிகளில் கனமழை முதல் அதிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. 
 
மேலும், இந்த புயல் கரையை கடக்கும் போது 100 முதல் 120 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், தனியார் வானிலை ஆய்வாளர் செல்வகுமார் இதெல்லாம் வெறும் உதார் என்பது போல ஒரு கணிப்பை வெளியிட்டுள்ளார். 
 
அதன்படி, வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவெடுத்து டிசம்பர் 16 ஆம் தேதி ஆந்திர மாநிலம் நரசபூர் அருகே கரை கடக்க வாய்ப்பு உள்ளது. 
 
புயல் ஆந்திரா நோக்கி செல்வதால் சென்னை உட்பட தமிழகத்துக்கு எதிர்பார்த்த மழை கிடைக்காது என அவர் கூறியுள்ளார். மேலும், தமிழக கடல்பகுதிக்கு எந்த பாதிப்பும் இல்லை. தமிழகத்துக்கு மழை இருக்காது. சென்னை சுற்று வட்டார பகுதிகளில் லேசான மழை இருக்கலாம் என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

ராஜேஷ் தாஸ் மீது மனைவி புகார்.! கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு..!!

நடுவானில் குலுங்கிய விமானம்..! பயணி ஒருவர் உயிரிழந்த பரிதாபம்..!!

சர்ச்சை வீடியோவை நீக்கிய இர்பான்.. கைது செய்யப்பட வாய்ப்பா?

பிரிவினையை தூண்டும் மோடி.! பொதுவாழ்க்கையில் இருந்து விலக வேண்டும்..! மல்லிகார்ஜுன கார்கே.!!

தமிழகத்திற்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும்.! கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments