Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னைக்கு மழையே கிடையாதா..? குண்டுதூக்கி போட்ட வானிலை மையம்!

Webdunia
சனி, 11 மே 2019 (09:31 IST)
இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. 
வெப்பசலனம் காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. அடிக்கும் வெயிலுக்கு இந்த மழை மக்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. அந்த வகையில் இன்று எந்த்ந்த மாவட்டங்களில் மழை பொழியும் என வானிலை ஆய்வு மையம் தகவ்ல் வெளியிட்டுள்ளது. 
 
தமிழகத்தில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, விருதுநகர், நெல்லை ஆகிய 9 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். லேசானது முதல் மிதமானது வரை மழையை எதிர்பார்க்கலாம். 
மணிக்கு 30 முதல் 40 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். ஆனால், ஒரு சில இடங்களில் அனல்காற்று வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். நாளையும் (மே 12) ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
சென்னைக்கு அதிர்ஷ்டம் இருந்தால் மட்டுமே மழைக்கு வாய்ப்புள்ளது என தமிழக வெதர்மேன் கூறியது போல, வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள பட்டியலில் சென்னையின் பெயர் இடம் பெறவில்லை. ஆக மொத்தம் சென்னைக்கு மழைக்கான வாய்ப்பு குறைவென்ரே தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments