Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருணாநிதிக்கு என்ன ஆச்சு?: பார்க்க யாரும் வர வேண்டாம் என மீண்டும் அறிவுறுத்தல்!

கருணாநிதிக்கு என்ன ஆச்சு?: பார்க்க யாரும் வர வேண்டாம் என மீண்டும் அறிவுறுத்தல்!

Webdunia
வெள்ளி, 13 ஜனவரி 2017 (17:41 IST)
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி திமுக தலைவர் கருணாநிதியை பார்க்க யாரும் வர வேண்டாம் என தலைமை கழகம் சார்பில் தொண்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


 
 
வருடம் தோறும் பொங்கல் பண்டிகை அன்று திமுகவினர் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து செல்வர். தன்னை சந்திக்க வரும் அனைவருக்கும் அன்று கருணாநிதி பத்து ரூபாய் அன்பளிப்பாக வழங்குவார். அதனை தங்களுக்கு கிடைத்த பொக்கிஷமாக திமுகவினர் பத்திரப்படுத்தி வைப்பர்.
 
இந்நிலையில் இந்த முறை திமுக தலைவர் கருணாநிதியை யாரும் சந்திக்க வரவேண்டாம் என கூறுயிருப்பது தொண்டர்களை சோர்வடைய வைத்துள்ளது. நோய்த்தொற்று ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே யாரும் சந்திக்க வரவேண்டாம் என கூறப்பட்டுள்ளதா பேசப்படுகிறது.
 
கடந்த சில மாதங்களாக திமுக தலைவர் கருணாநிதி முதுமை காரணமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினார் கருணாநிதி. ஆனாலும் அவரால் முன்பு போல இயங்க முடியவில்லை.
 
இதனால் மேலும் நோய்த் தொற்று ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் மருத்துவர்கள் கவனமாக உள்ளனர். அவர்களது அறிவுறுத்தலின் பேரிலேயே கருணாநிதியை தொண்டர்கள் யாரும் சந்திக்க வர வேண்டாம் என தலைமை கழகம் அறிவுறித்தியுள்ளதாக திமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹிந்தி கவிதை சொல்லாத மாணவனை அடித்து மிரட்டிய ஆசிரியை!? - சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!

துரத்தி வந்த அதிகாரிகள்; தப்பிக்க மணலைக் கொட்டிய லாரி! புதைந்து பலியான தொழிலாளர்கள்!

பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் இந்தி பெயர் அழிப்பு.. திமுகவினர் போராட்டம்..!

மத்திய அரசு இந்தியை திணிக்கவில்லை.. திமுக தான் அரசியல் செய்கிறது: டிடிவி தினகரன்

விஜய் எனது நண்பர்.. தேர்தல் நேரத்தில் கூட்டணி..? - புதுச்சேரி முதல்வர் கொடுத்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments