Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொன்.மாணிக்கவேல் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது: உயர்நீதிமன்றம் தடாலடி

Webdunia
திங்கள், 26 நவம்பர் 2018 (16:31 IST)
உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்றி பொன்மாணிக்கவேல் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிலை கடத்தல் தடுப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் நியமிக்கப்பட்டதும், அவர் அதிரடியாக செயல்பட்டு பல திருட்டு சம்பவங்களை கண்டறிந்தார். பல கோவில்களில் சிலைகள் திருடப்பட்டு போலி சிலைகள் வைக்கப்பட்டதை கண்டுபிடித்தார். அதோடு, தமிழகத்தில் 70 சதவீத கோவில்களில் போலியான சிலைகளே இருப்பதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினர். அதோடு, தமிழகத்தில் இருந்து கடத்தப்பட்டு வெளிநாட்டுக்கு கொண்டு செல்லப்பட்ட சில விலை மதிப்புடையை சிலைகளை அவர் மீட்டு தமிழகத்திற்கு கொண்டு வந்தார்.
























ஆனால், தமிழக அரசுக்கு அவர் சரியான தகவலை அளிக்கவில்லை எனக்கூறி சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் இருந்து தமிழக அரசு அவரை பலமுறை நீக்க முயற்சி செய்தது. ஆனால், நீதிமன்றம் தலையிட்டு அவர் அந்த பணியிலேயே தொடர வேண்டும் என உத்தரவிட்டது. 
 
இந்நிலையில் பொன்மாணிக்கவேல் சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸார் தனக்கு அழுத்தம் கொடுப்பதாகவும், தன்னை சுற்றி ஏதோ மர்ம வேலை நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும்  தெரிவித்தார்.
 
இதனை விசாரித்த நீதிமன்றம் உயர்நீதிமன்றத்தின் ஆணை இல்லாமல் பொன்.மாணிக்கவேல் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சமூகநீதின்னா என்னான்னு பீகார் பயணத்துக்கு பிறகாவது புரியட்டும்! - மு.க.ஸ்டாலின் குறித்து அன்புமணி!

பீகார் வாக்காளர் நீக்கம் ஜனநாயக படுகொலை! - மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

ஓணம் பண்டிகையை கொண்டாட வேண்டாம் என கூறிய ஆசிரியர்கள் சஸ்பெண்ட்.. கேரளாவில் பரபரப்பு..!

அணில் ஏன் அங்கிள்னு கத்துது.. ஜங்கிள்னுதானே கத்தணும்! - சீமான் கலாய்!

திருமணத்திற்கு மணமக்களின் பெற்றோர் சம்மதம் கட்டாயம்.. புதிய சட்டம் இயற்ற பாஜக எம்.எல்.ஏ வலியுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments