Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை இல்லை: தினகரன் அணிக்கு அபராதம் விதித்த நீதிமன்றம்!

அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை இல்லை: தினகரன் அணிக்கு அபராதம் விதித்த நீதிமன்றம்!

Webdunia
திங்கள், 11 செப்டம்பர் 2017 (11:13 IST)
அதிமுக பொதுக்குழுவை வரும் 12-ஆம் கூட்ட உள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி அணி அறிவித்தது. இதனை எதிர்த்து தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேல் நீதிமன்றத்தை நாடினார். இந்த மனு தற்போது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.


 
 
அதிமுகவில் தற்போது குழப்பங்கள் நீடித்து வருவதால் அதனை ஒரு முடிவுக்கு கொண்டு வர அதிமுக பொதுக்குழுவை கூட்டி சசிகலாவை பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்க எடப்பாடி பழனிச்சாமி அணி முடிவெடுத்தது. இதனையடுத்து பொதுக்குழு வரும் 12-ஆம் தேதி கூட்டப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
 
இதனை எதிர்த்து தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேல் நீதிமன்றத்தை நாடினார். எடப்பாடி பழனிச்சாமி அணியினர் கூட்ட உள்ள பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என அவர் மனுதாக்கல் செய்திருந்தர். இந்த மனு மீதான விசாரணை இன்று வந்தது.
 
இதனை விசாரித்த நீதிமன்றம் வெற்றிவேல் அளித்த மனுவை தள்ளுபடி செய்தது. அதிமுக அம்மா அணியினர் கூட்ட உள்ள பொதுக்குழுவுக்கு தடை விதிக்க முடியாது என மறுத்துவிட்டது. அதே நேரத்தில் வெற்றிவேல் நீதிமன்ற நேரத்தை வீணடித்ததாக கூறி அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளது. இது தினகரன் அணிக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

அடுத்த கட்டுரையில்
Show comments