Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனி வெப்ப அலை இல்லை.. வரும் நாட்களில் மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன்

Mahendran
வெள்ளி, 16 மே 2025 (11:15 IST)
தற்போது அக்னி நட்சத்திரம் நடந்து கொண்டிருந்தாலும், தமிழ்நாட்டில் இனி வெப்ப அலைக்கு வாய்ப்பு இல்லை என்றும், வரும் நாட்களில் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
 
தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது சமூக வலைதளத்தில், "கோடை காலம் இன்றுடன் முடிகிறது. இன்று முதல் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்யும். இந்த ஆண்டு ஒரு தனித்துவமான ஆண்டாக, வெப்ப அலை இல்லாத ஆண்டாக இருக்கும்," என்றும் தெரிவித்துள்ளார்.
 
"இந்த ஆண்டு மே மாதத்தில், சென்னையில் 40 டிகிரி செல்சியஸ்-ஐ ஒரு நாளும் தாண்டவில்லை. கடந்த 25 ஆண்டுகளில், இது போல் மூன்று முறை நடந்துள்ள நிலையில், இது நான்காவது முறை," என்றும் அவர் கூறியுள்ளார்.
 
மேலும் அரபிக்கடல் மற்றும் அங்காள விரைகுடாவில் ஒரு குறைந்த காற்றழுத்தத்திற்கு வாய்ப்பு உள்ளது என்றும் அது புயலாகவும் மாறலாம்," என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
"இனிமேல் கோடை காலம் இல்லை. அவ்வப்போது மழை பெய்யும். கோடை இல்லாத மே மாதத்தை நன்றாக அனுபவியுங்கள்," என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இராமநாதபுரத்தில் ஹைட்ரோகார்பன் கிணறுகள்! திமுக துரோகம் செய்துவிட்டது! - அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

விஜயகாந்த் உயிரோட இருந்தபோது எங்க போனீங்க விஜய்? - பிரேமலதா கேள்வி!

கூட்டணி தலைவர் பழனிசாமிதான்.. ஆனால் முதல்வர்? - செக் வைத்த நயினார் நாகேந்திரன்!

ஓய்வு பெறும் டிஜிபி சங்கர் ஜிவால்! அடுத்த டிஜிபி யார்? - லிஸ்டில் இருக்கும் முக்கிய அதிகாரிகள்!

மனைவியை எரித்து கொலை செய்த கணவர்.. தப்பிக்க முயன்றபோது துப்பாக்கி சூடு.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments