ஸ்டாலின் சாரே நினைத்தாலும், அந்த சாரை எந்த சாராலும் காப்பாற்ற முடியாது! ஈபிஎஸ்

Mahendran
திங்கள், 2 ஜூன் 2025 (12:43 IST)
ஸ்டாலின் சாரே நினைத்தாலும், அந்த சாரை எந்த சாராலும் காப்பாற்ற முடியாது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது: 
 
அண்ணா பல்கலை. பாலியல் வழக்கின் குற்றவாளியான திமுக அனுதாபி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது சென்னை மகளிர் நீதிமன்றம்.
 
இந்த வழக்கில் குற்றவாளி திமுக ஞானசேகரனைக் காப்பாற்ற எத்தனையோ சித்து வேலைகளை செய்தது ஸ்டாலின் மாடல் திமுக அரசு.
 
அத்தனையும் முறியடித்து, மக்கள் மன்றம் முதல் சமூக ஊடகங்கள் வரை தனது தொடர் போராட்டத்தால் இந்த வழக்கின் குற்றவாளிகளில் ஒருவனான திமுக அனுதாபி ஞானசேகரனுக்கு தண்டனையை சாத்தியப்படுத்தியுள்ளது அதிமுக.
 
பாதிக்கப்பட்ட மாணவியின் குரலாக அஇஅதிமுக தொடர்ந்து ஒலிக்கும் என்ற வாக்குறுதியை இன்றுவரை நிறைவேற்றி வருகிறோம்.
 
அதனால் தான் #யார்_அந்த_SIR என்ற முழுமையான நீதிக்கான கேள்வியை இன்றும் கேட்கிறோம்.
 
FIR-ல் குறிப்பிடப்பட்ட அந்த SIR யார்? விசாரணையின் போதே எதற்கு அந்த SIR Ruled-out செய்யப்பட்டான்? எதற்காக ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி என்று அவசர அவசரமாக இந்த வழக்கை முடிக்க முனைந்தது திமுக அரசு?
 
#SIRஐ_காப்பாற்றியது_யார் ?
 
இந்த கேள்விகள் கேள்விகளாகவே நீண்ட நாட்கள் இருக்காது. அதிமுக  ஆட்சி அமைந்ததும், அனைத்து பதில்களும் கிடைக்கத் தான் போகிறது.
 
ஸ்டாலின் சாரே நினைத்தாலும்,  அந்த SIR-ஐ எந்த சாராலும் காப்பாற்ற முடியாது!
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கருப்பு சட்டை போட்டு சம்பவம் பண்ணும் ஹெ.ராஜா!.. இப்படி ட்ரோலில் சிக்கிட்டாரே!...

புதிய விமான சேவை தொடங்க இதுவே 'சிறந்த நேரம்.. இண்டிகோ பிரச்சனை குறித்து மத்திய அமைச்சர்..!

உங்கள் மனைவி குழந்தைகளை இந்தியாவுக்கு அனுப்புங்கள்: அமெரிக்க துணை அதிபருக்கு நெட்டிசன்கள் பதிலடி..!

வங்கக்கடலில் மீண்டும் காற்றழுத்த தாழ்வு நிலை: டெல்டா மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

அதிமுக - பாஜக கூட்டணி 3-வது இடத்துக்குத் தள்ளப்படும்: டிடிவி தினகரன் கணிப்பு!

அடுத்த கட்டுரையில்