Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏர்போர்ட்டில் இனி பேட்டி கொடுக்க மாட்டேன்: அண்ணாமலை அதிரடி அறிவிப்பு..!

Mahendran
செவ்வாய், 11 ஜூன் 2024 (16:55 IST)
விமான நிலையத்தில் இனி பேட்டி அளிக்கமாட்டேன் என்றும் கட்சி அலுவலகத்தில் மட்டுமே பேட்டி அழைப்பேன் என்றும் இனிமேல் அனைத்தையும் ஒழுங்குபடுத்த போகிறோம் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 
 
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த சில நாட்களுக்கு முன்னர் டெல்லி சென்றார் என்றும் அங்கு அவர் அமைச்சராக போகிறார் என்ற செய்தி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவர் அமைச்சர் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் டெல்லியில் பதவி ஏற்பு விழாவை முடித்துவிட்டு இன்று தமிழகம் திரும்பிய அண்ணாமலையை விமான நிலையத்தில் பேட்டி எடுக்க செய்தியாளர்கள் குவிந்த போது இனிமேல் ஏர்போர்ட்டில் பேட்டி அளிக்க மாட்டேன் என்றும் அனைத்தும் இனிமேல் கட்சி அலுவலகத்தில் மட்டுமே பேட்டி என்றும் எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்த போகிறோம் என்றும் அண்ணாமலை தெரிவித்தார். 
 
விமானத்தில் நாங்கள் வந்து கொண்டிருக்கும்போதே சில விஷயங்கள் நடந்து வருகிறது என்றும் அது தெரியாமல் நான் பேட்டி அளித்தால் பிரச்சனையாகிவிடும் என்றும் அதனால் இனிமேல் ஏர்போர்ட்டில் பேட்டி கிடையாது என்றும் பேட்டி எப்போது என்பதை முன்கூட்டியே செய்தியாளர்களுக்கு அறிவித்து விடுவோம், அந்த பேட்டியும் கட்சி அலுவலகத்தில் மட்டுமே நடைபெறும் என்றும் அண்ணாமலை தெரிவித்தார். 
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அடுத்த கட்டுரையில்
Show comments