300வது நாளை எட்டும் பெட்ரோல், டீசல் விலை.. சென்னையில் இன்றைய நிலவரம்..!

Webdunia
வியாழன், 16 மார்ச் 2023 (07:47 IST)
சென்னையில் கடந்த சில மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லை என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இன்று 299 நாளாக பெட்ரோல் டீசல் விலை மாற்றம் இல்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் கடந்த 299 நாட்களுக்கு முன்பு மாறிய பெட்ரோல் விலை அதன் பின் ஒரே விலையில் விற்பனையாகி வருகிறது என்பதும் நாளையுடன் 300 நாள் என்ற சாதனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்தியாவில் இதுவரை தொடர்ச்சியாக 300 நாட்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லாமல் இருந்ததில்லை என்பதும் இதுதான் முதல் முறை என்றும் கூறப்படுகிறது
 
இருப்பினும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்திருப்பதால் அதற்கேற்றவாறு இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது. 
 
இந்த நிலையில் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 என்றும் இன்று சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24  என்று விற்பனை ஆகி வருகிறது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முயல்வேட்டையில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் பரிதாப பலி.. திருவண்ணாமலையில் சோகம்..!

சபரிமலைக்கு மாலை போட்ட மாணவர் கருப்பு உடை அணிய தடை.. பள்ளி நிர்வாகத்திற்கு எதிர்ப்பு..!

வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்தால் நேபாளம் போல் புரட்சி வெடிக்கும்: ஆர்ஜேடி எச்சரிக்கை

மேகதாது அணை சர்ச்சை: உச்ச நீதிமன்ற அனுமதி குறித்த தகவல் தவறு! அமைச்சர் துரைமுருகன் விளக்கம்

மேகதாதுவில் அணை கட்ட சுப்ரீம் கோர்ட் அனுமதியா? தமிழக அரசுக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments