Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வில் மாற்றமில்லை - உச்ச நீதிமன்றம்

Webdunia
திங்கள், 27 ஜனவரி 2020 (19:30 IST)
மருத்துவ படிக்க அனைவரும் மாணவர்கள் நீட் எனும் நுழைவுத் தேர்வு கட்டாயம் எழுத வேண்டும் என தெரிவித்துள்ளது.
மருத்துவ படிப்புக்கு நீட் நுழைவுத் தேர்வு கட்டாயம் என்ற சட்டத்திற்கு எதிரான வேலூரைச் சேர்ந்த சி.எம்.சி மருத்துவமனை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தது.
 
இந்த வழக்கின் மீதான விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி அருண் மிஸ்ரா, இந்திரா பானர்ஜி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.
 
சி.எம்.சி மருத்துவமனையின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவால், வேலூர் மருத்துவ கல்லூரிக்கு நீட் தேர்வில் இருந்து விதிவிலக்கு அளிக்க வேண்டும் என கோரினார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் தேர்வு கட்டாயம் நடைபெறும். நீட் தேர்வில் இருந்து ஒரு கல்லூரிக்கு மட்டும் விலக்கு அளிக்க முடியுமா / என்று கூறினர்.
 
மேலும்,நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை சென்னையில் போக்குவரத்து மாற்றம்.. என்ன காரணம்? எந்த பகுதியில் மாற்றம்?

கதறி அழுது வீடியோ போட்ட பாடகி செலினா கோம்ஸ்.. பதில் வீடியோ போட்ட வெள்ளை மாளிகை..!

மேலும் 4 மாவட்டங்களில் அரசின் தோழி விடுதி! எங்கெங்கு தெரியுமா?

திமுகவை எதிர்ப்பதை விட்டுட்டு உங்க கொள்கை என்னன்னு சொல்லுங்க! - விஜய்க்கு சரத்குமார் கேள்வி!

10ஆம் வகுப்பு படித்து 10 வருடமாக போலி டாக்டராக இருந்த பெண்.. அதிரடி கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments