Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்ப்பிணி உயிரிழந்த விவகாரத்தில் அபாய சங்கிலியில் பிரச்சினை இல்லை: ரயில்வே துறை விளக்கம்

Mahendran
வெள்ளி, 10 மே 2024 (15:37 IST)
ரயிலில் இருந்து கர்ப்பிணி கீழே விழுந்து உயிரிழந்த விவகாரத்தில் அபாய சங்கலியில் பிரச்சனை இல்லை என ரயில்வே துறை விளக்கம் அளித்துள்ளது 
 
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கடந்த சில நாட்களுக்கு முன்னர் கஸ்தூரி என்ற 7 மாத கர்ப்பிணி கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலில் சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் வாந்தி எடுப்பதற்காக கை கழுவும் இடத்திற்கு அருகே நின்றபோது தடுமாறி கீழே விழுந்தார் 
 
உடனே உறவினர்கள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்த நிலையில் ரயில் நிற்கவில்லை. இதனை அடுத்து அபாய சங்கிலி வேலை செய்யவில்லை என குற்றம் சாட்டப்பட்டது. இந்த நிலையில் கர்ப்பிணி விழுந்த இடத்திலிருந்து எட்டு கிலோமீட்டர் தூரத்திற்கு சென்ற பிறகு ரயில் நின்றது 
 
இந்த நிலையில் அபாய சங்கிலி சரியாக வேலை செய்திருந்தால் கஸ்தூரியை காப்பாற்றி இருக்கலாம் என்று உறவினர்கள் குற்றம் சாட்டிய நிலையில் இது குறித்து ரயில்வே துறை விளக்கம் அளித்துள்ளது 
 
ரயிலில் எந்த ஒரு தொழில்நுட்ப கோளாறும் இல்லை என்றும் குறிப்பாக அபாய சங்கிலியில் பிரச்சனை இல்லை என்றும் அனைத்து ரயில் பெட்டிகளிலும் அபாயச் சங்கிலி முழுமையாக இயங்கியுள்ளது என்றும் அந்த சங்கிலியை முறையான அழுத்தத்துடன் இழுக்கவில்லை அதனால் தான் ரயில் நிற்கவில்லை என்றும் கூறியுள்ளனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments