Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திமுக, காங்கிரஸுடன் கூட்டணி இல்லை: ஜி.கே.வாசன்

திமுக, காங்கிரஸுடன் கூட்டணி இல்லை: ஜி.கே.வாசன்

திமுக, காங்கிரஸுடன் கூட்டணி இல்லை: ஜி.கே.வாசன்
, வெள்ளி, 4 மார்ச் 2016 (16:33 IST)
தமிழக சட்டப் பேரவை தேர்தலில் திமுகவுடன் கூட்டணி சேர மாட்டோம் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.


 
 
தமிழ் மாநில காங்கிரஸின் மாணவரணி கூட்டம் சென்னையில் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் பள்ளி படிப்பு முடிந்த பின் மாணவர்கள் என்ன படிக்கலாம் என வழிகாட்டும் புத்தகத்தை வெளியிட்டார் ஜி.கே.வாசன்.
 
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எந்தக் கட்சியுடன் கூட்டணி என்பதை சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த பின்னரே தெரிவிப்போம் என்றார். மேலும், வெற்றி பெறும் அணியுடன்தான் கூட்டணி அமைப்போம் என்றார்.
 
தேர்தல் வெற்றிக்காக ஒருபோதும் திமுக கூட்டணியில் சேரமாட்டோம். அதேநேரத்தில் காங்கிரஸுடன் இணையவும் மாட்டோம் என்றார் ஜி.கே.வாசன். தமிழ் மாநில காங்கிரஸ் எப்பொழுதும் தனித்தன்மையுடன் செயல்படும் என்றார்.
 
இந்த நிகழ்ச்சியில் கட்சியின் மூத்த தலைவர்கள் ஞானதேசிகன், பீட்டர் அல்போன்ஸ், கோவை தங்கம், சேகர், விஸ்வநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக மாணவர்கள் நலன், குறைகள் கேட்டறிதல், தீர்வு காண வழிவகைகள், பிரச்சனை குறித்து அரசுக்கு ஆலோசனை வழங்கி மேம்படுத்தும் வகையிலும், சட்ட பாதுகாப்பு அளிக்கும் நோக்கத்திலும் மாநில ஆணையம் உருவாக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

Share this Story:

Follow Webdunia tamil