Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக கூட்டணி புளிக்கும்: சொல்வது பாஜக

Webdunia
வெள்ளி, 6 நவம்பர் 2015 (22:45 IST)
தமிழகத்தில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைக்காது என தமிழக பாஜக மேலிட பார்வையாளர் முரளிதரராவ் கருத்து தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து, பாஜக மேலிட பார்வையாளர் முரளிதரராவ் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், தமிழகத்தில் கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது, நரேந்திர மோடி கலந்து கொண்டதால்தான்  பாஜக எழுச்சி பெற்றுள்ளது.
 
தமிழகத்தில் இதுவரை 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கட்சியில் உறுப்பினராக விரும்பி சேர்ந்துள்ளனர். பாமகவும், தேமுதிகவும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து முழுமையாக விலகவில்லை. அவர்கள் எங்கள் கூட்டணியில் தான் உள்ளனர். தேசிய ஜனநாயக கூட்டணியை பொறுத்தவரை முதல்வர் வேட்பாளர் குறித்து முடிவு இன்னும் முடிவு செய்யவில்லை.
 
தமிழகத்தில், வரும் சட்ட மன்ற தேர்தலின் போது, பாஜக தலைமையில் தான் வலிமையான கூட்டணியை அமைப்போம். எந்த சூழ்நிலையிலும் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கமாட்டோம் என்றார். 
 

ஜாபர் சாதிக்கின் மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை! பெரும் பரபரப்பு..!

பாஜகவை வீழ்த்த இது ஒன்று தான் வழி.. 5 கட்ட தேர்தல் முடிந்தபின் கூறும் பிரசாந்த் கிஷோர்..!

அண்ணாமலை போல் அரசியல் செய்யவே ‘காமராஜர் ஆட்சி’.. செல்வப்பெருந்தகை திட்டம்..!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை.! கேரளாவுக்கு சீமான் கண்டனம்.!!

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி.! சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தமிழக அரசு..!!

Show comments