Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

என்.எல்.சி. தொழிலாளர் பிரச்சினைக்கு சுமூகத் தீர்வு காண வேண்டும்: வைகோ

என்.எல்.சி. தொழிலாளர் பிரச்சினைக்கு சுமூகத் தீர்வு காண வேண்டும்: வைகோ
, வியாழன், 13 ஆகஸ்ட் 2015 (00:21 IST)
என்.எல்.சி. தொழிலாளர் பிரச்சினைக்கு, சுமூகத் தீர்வு காண வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
 

 
இது குறித்து, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
புதிய ஊதிய மாற்று ஒப்பந்தத்தை ஏற்படுத்த கோரி நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவத்தின் 13 ஆயிரம் நிரந்தரப் பணியாளர்கள் கடந்த 23 நாட்களாகத் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
இந்தியாவிலேயே மிகச் சிறந்த பொதுத்துறை நிறுவனமாக ‘நவரத்னா’ தகுதியைப் பெற்றுள்ள என்.எல்.சி. நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உழைத்து வரும் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை என்.எல்.சி. நிர்வாகம் அலட்சியப்படுத்துவது மட்டும் அன்றி, தொழிலாளர்கள் மீது அடக்குமுறையை ஏவி வருவது வேதனை அளிக்கிறது.
 
தொழிலாளர் முன்னேற்ற சங்கத் தலைவர் திருமாவளவன் நிரந்தரமாகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளர் என்ற தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. என்.எல்.சி. நிறுவனத்தின் ஏதேச்சதிகார நடவடிக்கையைக் கண்டிப்பதுடன் உடனடியாக தொழிற்சங்கத் தலைவர் மீதான பணி நீக்க ஆணையைத் திரும்பப் பெற வேண்டும்.
 
மேலும், என்.எல்.சி. தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 
 

Share this Story:

Follow Webdunia tamil