Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

செம்பரம்பாக்கம் நீர் செல்லும் 6 பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

செம்பரம்பாக்கம் நீர் செல்லும் 6 பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
, புதன், 25 நவம்பர் 2020 (09:52 IST)
வங்க கடலில் உருவான நிவர் புயல் இன்று கரையை கடக்கும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளதை அடுத்து தமிழகம் முழுக்க தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையால் சென்னையில் குடிநீர் ஆதாரமாக இருக்கும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21 அடியை தாண்டியது. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்ட உயரமான 24 அடியாகும்.  
 
இதனிடையே தற்போது நிவர் புயல் மாமல்லபுரம் - புதுச்சேரி அருகே அதிதீவிர புயலாக கரையை கடக்கும் என கூறப்பட்டுள்ளதால் சென்னையில் விடிய விடிய கனமழை கொட்டியது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கியது.  இதையடுத்து மழையின் காரணமாக 22 அடியை நெருங்கியது செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம். 
 
ஏற்கனவே மழை பொழிவை பொறுத்தே செம்பரம்பாக்கம் ஏரியை திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த நிலையில் 24 அடியில் 22 அடியை எட்டியதால் செம்பரம்பாக்கம் திறக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. எதிர்ப்பார்த்தப்படியே, இன்று நண்பகல் 12 மணிக்கு செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து விநாடிக்கு 1,000 கனஅடி நீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் செம்பரம்பாக்கம் நீர் செல்லும் வாய்க்கால் பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெளியேற அதிரடியாக உத்தரவிட்டதுடன் காவலூர், குன்றத்தூர், திருநீர்மலை, சிறுகளத்தூர், வழுதியமேடு, திருமுடிவாக்கம் ஆகிய 6 பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விநாடிக்கு 1,000 கன அடி நீர்: நண்பகலில் திறக்கப்படும் செம்பரம்பாக்கம்!!