Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூரிய உதயத்தைத் தாமதமாக்கினேன் – அலறவைக்கும் நித்யானந்தா வீடியோ !

Webdunia
சனி, 6 ஜூலை 2019 (09:23 IST)
பாலியல் பிரச்சனையில் சிக்கி பல்வேறு வழக்குகளால் இப்போது எங்கே இருக்கிறார் என்றே தெரியாத நித்யானந்தா அவ்வப்போது வீடியோக்களை வெளியிட்டு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

நித்யானாந்தா மீதான பாலியல் வழக்கு ஒன்றின் விசாரணை விரைவில் வரவுள்ள நிலையில் அவர் வெளிநாட்டுக்கு தப்பிவிட்டதாக கன்னட சேனல் ஒன்று செய்தி வெளியிட்டது. ஆனால் அவரது பாஸ்போர்ட் காலாவதி ஆகி விட்டதால் அவரால் வெளிநாட்டிற்கு சென்றிருக்க முடியாது என சிபிஐ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் இப்போது எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை எனப் போலிஸார் தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் அவ்வப்போது வீடியோக்களை வெளியிட்டு அறிவியல் மற்றும் ஆன்மீகம் பற்றி தன்பாட்டுக்கு ஏதாவது உளறிக்கொண்டு இருக்கிறார் அவர். அவரது இந்த வீடியோக்கள் சமூகவலைதளங்களில் மிகவும் பிரபலம். அதுபோல இப்போது வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் ‘இன்று எத்தனை பேர் சூரியன் உதித்ததைக் கவனித்தீர்கள்.நான் காலையில் தியானத்தை முடிக்க காலதாமதம் ஆகவே நான் தியானத்தை முடிக்கும் வரை சூரியன் உதயமாகக் கூடாது எனக் கட்டளையிட்டேன்.என் கட்டளையைக் கேட்டு சூரியன் 40 நிமிடங்கள் தாமதமாகவே உதித்தது. இதை நீங்கள் கூகுளில் சரிபார்த்துக் கொள்ளலாம்.’ எனக் கூற அவரது சீடர்கள் அதற்குக் கைதட்டி ஆரவாரம் செய்கின்றனர். ஆனால் நெட்டிசன்களோ இந்த வீடியோவை வைத்து செய்து வருகின்றனர்.
https://twitter.com/RifatJawaid/status/1146717557023358977

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உளவுத்துறை பெண் அதிகாரி மர்ம மரணம்.. தண்டவாளத்தில் இருந்த பிணம்..!

9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

திகார் சிறையை மாற்ற முடிவு.. டெல்லி முதல்வர் அறிவிப்பு..!

கவர்னரை புகழ்ந்து பேசுவது தவறு இல்லையா? நடிகர் பார்த்திபனுக்கு விசிக கண்டனம்..!

ஈபிஎஸ் யாரை பார்க்க செல்கிறார் என்பது எனக்கு தெரியும்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்