Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நித்யானந்தா வீடியோ விவகாரம்: சென்னை ஐகோர்ட்டில் ரஞ்சிதா திடீர் மனு

Webdunia
புதன், 6 செப்டம்பர் 2017 (05:44 IST)
கடந்த 2010ஆம் ஆண்டு தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நித்யானந்தாவுடன் ரஞ்சிதா ஆபாசமாக இருப்பது போன்ற வீடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்த வழக்கு ஒன்று சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது



 
 
இந்த வீடியோ மூலம் தாங்கள் பணம் கேட்டு மிரட்டப்படுவதாகவும், இது டெக்னாலஜி மூலம் தயாரிக்கப்பட்ட பொய்யான வீடியோ என்றும் நித்யானந்தா தியான பீடத்தின் நிர்வாகி இந்த வழக்கை தொடர்ந்திருந்தார். பின்னர் இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் கடந்த ஏழு வருடங்களில் விசாரணை நடந்து வழக்கு இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில் திடீரென நடிகை ரஞ்சிதா தற்போது சென்னை ஐகோர்ட்டில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:
 
சி.பி.சி.ஐ.டி. போலீசார், வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட ஆர்த்திராவ், இமெயிலை சரிவர ஆய்வு செய்யவில்லை. அவர் வினய் பரத்வாஜ் என்பவருடன் சேர்ந்து கூட்டுச் சதி செய்துள்ளார். இதற்காக இருவரிடையே நடந்த இமெயில் தொடர்பை ஆய்வு செய்யவேண்டும். மேலும், நித்யானந்தா மீது ஆர்த்திராவ் தொடர்ந்த வழக்கு கர்நாடகா மாநிலத்தில் உள்ள செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்படுகிறது. அங்குள்ள அசல் வீடியோ காட்சியை போலீசார் பெறவில்லை. நகல் வீடியோ காட்சியை வைத்து தான் சைதாப்பேட்டை கோர்ட்டு விசாரித்துள்ளது. எனவே, இந்த வழக்கை மறு விசாரணை செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
 
இந்த மனு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படு இதுகுறித்து மனுவுக்கு விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராகுல் காந்தியை விட அதிக வாக்குகள் பெற்ற பிரியங்கா காந்தி. வயநாடு தொகுதி நிலவரம்..!

மகாராஷ்டிராவில் தனித்து மெஜாரிட்டி பெற்ற பாஜக.. ஷிண்டேவுக்கு முதல்வர்? பதவி இல்லையா?

மோடி, அமித்ஷா,அதானி கூட்டணிக்கு கிடைத்த வெற்றி: உத்தவ் தாக்கரே கட்சி குற்றச்சாட்டு

ஜார்கண்ட் மாநிலத்தில் திடீர் திருப்பம்.. ஆட்சியை பிடிக்கிறது காங்கிரஸ் கூட்டணி..!

ஹெச்.ராஜாவுக்கு கொலை மிரட்டல்: மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகி மீது பாஜக புகார்

அடுத்த கட்டுரையில்
Show comments