Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உங்கள் ஓட்டலுக்கு அனுமதி கொடுக்க உத்தரவிடுகிறேன்: நித்யானந்தா அட்ராசிட்டி

Webdunia
திங்கள், 24 ஆகஸ்ட் 2020 (07:43 IST)
இந்திய அரசால் தேடப்பட்டு வரும் பாலியல் குற்றவாளி நித்யானந்தா, ’கைலாஷா’ என்ற தனிநாட்டை அமைத்துள்ளதாக கூறியதோடு அந்த நாட்டின் கரன்சியையும் சமீபத்தில் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். மேலும் ஐநாவின் அனுமதி பெற்ற இந்த நாட்டில் விரைவில் மக்கள் குடியேறுவார்கள் என்றும் அந்த நாட்டிற்கு தானே அதிபர் என்றும் அவர் பிரகடனப்படுத்திக் கொண்டார் 
 
இந்த நிலையில் மதுரையை சேர்ந்த ஓட்டல் அதிபர் ஒருவர் ’கைலாஷா’ நாட்டில் தங்களது ஓட்டல் கிளைகளை தொடங்க அனுமதிக்க வேண்டும் என வீடியோ ஒன்றின் மூலம் கேட்டுக் கொண்டார். இந்த வீடியோவுக்கு தற்போது நித்தியானந்தா பதில் அளித்துள்ளார் 
 
’கைலாஷா’ நாட்டில் உங்களுடைய ஓட்டல் கிளை அமைக்க அனுமதிக்குமாறு எனது அதிகாரிகளுக்கு நான் உத்தரவிடுகிறேன் என்றும், இதுகுறித்து விரைவில் எங்களது அதிகாரிகள் உங்களை தொடர்பு கொள்வார்கள் பொது மக்கள் வாழ்வதற்கு அனுமதிக்கப்பட்ட உடன் ’கைலாஷா’ நாட்டில் உங்கள் ஹோட்டல் திறப்பதற்கு கண்டிப்பாக அனுமதி கிடைக்கும் என்றும் கூறியுள்ளார்
 
இல்லாத ஒரு நாட்டிற்கு நாணயங்களை வெளியிட்டதோடு தற்போது ஓட்டலும் நடத்த அனுமதி கொடுத்துள்ள நித்தியானந்தாவின் அட்ராசிட்டி சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்