Webdunia - Bharat's app for daily news and videos

Install App

படையப்பா பாட்டுக்கு குத்து டான்ஸ்! – நித்தி ஆசிரம அட்ராசிட்டி வீடியோ!

Webdunia
செவ்வாய், 10 டிசம்பர் 2019 (18:35 IST)
நித்தியானந்தா தனித்தீவு ஒன்றை வாங்கி விட்டதாக செய்திகள் வெளியானபடி இருக்க நித்தியானந்தா ஆசிரமத்தின் பழைய வீடியோ ஒன்று தற்போது ட்ரெண்டாகி வருகிறது.

தனது ஆசிரமத்தில் சிறுவர், சிறுமியரை நித்தியானந்தா அடைத்து வைத்து கொடுமைப்படுத்துவதாக வெளியான செய்தியை அடுத்து அவரது குஜராத் ஆசிரமம் மூடப்பட்டது. நித்யானந்தாவை கைது செய்ய போலீஸ் முயற்சித்து வரும் வேளையில் அவர் தப்பித்து எங்கோ சென்று இருந்து கொண்டு தனது பக்தர்களுக்கு ஆன்லைன் மூலமாக ஆன்மீக சொற்பொழிவு நடத்திக்கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் தனித்தீவு வாங்கி அதற்கு ஸ்ரீ கைலாசம் என பெயர் வைத்துவிட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இன்றைய தினத்துக்கு சமூக வலைதளங்களில் நித்தியானந்தாதான் பேசுப்பொருளாக உள்ளார்.

நித்தியானந்தா ஆசிரமத்தில் சமீபத்தில் அவரது சிஷ்யர்கள் மற்றும் சிஷ்யைகள் ‘படையப்பா’ பட பாடலுக்கு ஆடும் வீடியோ வைரலாகியுள்ளது. அதாவது நித்யானந்தாவின் புதிய தீவு இப்படித்தான் இருக்கும் என சூசகமாக தெரிவிப்பதற்காக நெட்டிசன்கள் இந்த வீடியோவை ஷேர் செய்து வருவதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை மக்களே! 17 வருடம் கழித்து மீண்டும் வருகிறது டபுள் டக்கர் பேருந்துகள்!

தேஜஸ்வி யாதவை அடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி.யின் மனைவிக்கும் இரட்டை வாக்காளர் அட்டை!

ஆணுறுப்பு சிதைக்கப்பட்டு அணையில் வீசப்பட்ட பிணம்.. 14 பேர் கைது..!

கள்ளக்காதலை விட்டுவிட கெஞ்சிய கணவர்.. மனைவி மறுப்பு.. அதன்பின் நடந்த விபரீதம்..!

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவோம்.. டிரம்ப் மிரட்டலுக்கு பயப்படாத இந்தியா.. அதிர்ச்சியில் அமெரிக்கா..!

அடுத்த கட்டுரையில்
Show comments