Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கைலாசாவில் நோ கொரோனா ஃபியர்: நித்தி ஆன் ஃபயர்!!

Webdunia
செவ்வாய், 17 மார்ச் 2020 (18:38 IST)
கைலாசாவில் கொரோனா இல்லை, எங்களை பரமசிவன் பாதுகாக்கிறார் என நித்தியானந்தா தெரிவித்துள்ளார். 

 
உலகம் முழுவதும் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ், தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதனால், பல மாநிலங்களில் கொரோனா காரணமாக எமெர்ஜென்சி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 137 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.
 
இந்நிலையில் போலீஸாரால் தேடப்பட்டு வரும் நித்தியானந்தா கொரோனா வைரஸ் குறித்து அவரது அதிகாரப்பூர்வ டிவிட்டர் தளமாக கருதப்படும் பிஎம்ஓ கைலாஸ் அக்கவுண்டில் ஒரு டிவிட் போடப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 
 
கொரோனா வைரஸால் நாங்கள் (கைலாஸ்) பாதிக்கப்படவில்லை. கொரோனா வைரஸ் எங்களைத் தாக்காது. எதிர்காலத்திலும் எங்களைத் தாக்காது. ஏனெனில் பரமசிவன் எங்களைப் பாதுகாத்து வருகிறார். காலபைரவரும் எங்களுக்கு உற்ற துணையாக இருந்து பாதுகாவலாக இருக்கிறார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments