Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் கொடுப்பது சரியா?

Webdunia
சனி, 14 அக்டோபர் 2017 (10:23 IST)
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த காய்ச்சல் காரணமாக அதிகளவிலான உயிரிழப்பும் நேர்ந்துள்ளது. டெங்கு காய்ச்சலை தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.  இந்த நிலையில் அரசியல் கட்சிகளும், தனியார் சமூக அமைப்புகளும், நடிகர்களின் ரசிகர்களும் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் கொடுத்து வருகின்றனர்.



 
 
உண்மையில் நிலவேம்பு கசாயம் டெங்கு காய்ச்சல் வராதவர்களுக்கும் கொடுக்கலாமா? நிலவேம்பு கசாயம் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவது உண்மைதானா? என்று மருத்துவர்களிடம் கேட்டபோது டெங்கு காய்ச்சலை நிலவேம்பு கசாயம் கட்டுப்படுத்துகிறது என்பதற்கு அறிவியல் ரீதியான ஆதாரம் இல்லை என ஆங்கில மருத்துவ மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
ஆனால் சித்த மருத்துவர்கள் நிலவேம்பு கசாயத்தால் டெங்கு காய்ச்சல் குணமாகும் என்று அடித்து கூறுகின்றனர். ஆனால் அதே நேரத்தில் சரியான விகிதத்தில் கலக்கப்பட்ட கசாயம் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். அரசியல் கட்சியினர்களும், ரசிகர்களும் கொடுக்கும் நிலவேம்பு கசாயத்தில் சரியான அளவு இருக்குமா? என்பது கேள்விக்குறியே. மேலும் இந்த கசாயம் காய்ச்சல் வந்தவர்களுக்கு மட்டும் கொடுத்தால் போதும் என்றும் காய்ச்சல் வரும் முன்னே குடிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர். எனவே காய்ச்சல் இல்லாதவர்கள் நிலவேம்பு கசாயத்தை வருமுன் காப்போம் என்ற யோசனையில் குடிக்க வேண்டாம் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் தமிழர் கட்சிக்கும், துரைமுருகன் சேனலுக்கும் எந்த தொடர்பும் இல்லை! – சீமான் பரபரப்பு அறிக்கை!

நாசாவில் பணிபுரிந்த இந்திய வம்சாவளி பெண் பணிநீக்கம்.. டிரம்ப் உத்தரவு ஏன்?

முதல்வர் ஸ்டாலின் கண்டுபிடித்த புதிய மடைமாற்று வித்தை: நயினார் நாகேந்திரன்

நாட்டின் புதிய ஜின்னா தான் மம்தா பானர்ஜி.. பாஜக கடும் விமர்சனம்..!

தமிழகத்தில் ஏப்ரல் 21 வரை மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments